பக்கம் எண் :

விளக்க உரை63


9, 10 : அடுபோர் மறம்தரு .........போர்படைத்த சீரே

   (சொ - ள்.) போரில் வெற்றியைப் பெறுகின்ற சீவகன் என்ற மன்னன் மனைவியர்
எண்மரில் காந்தருவதத்தை என்பவள் சிறந்தவளாக விளங்குவதற்குக் காரணம்
"தத்தை" என்ற உன் பெயரை அவள் பெற்றிருந்த சிறப்புத்தானே (வேறு ஒன்றும்
உண்டோ?)

   (வி - ம்.) மறம்தரு வீரத்தைத் தனக்குத் தருகின்ற நிலந்தரு திருவிற் பாண்டியன்
என்பது போலப் பொருள் கொள்க. சீவகன் தேவியர் எண்மர்: காந்தருவதத்தை,
குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, சுரமஞ்சரி, இலக்கணை என்பன அவர்கள்
பெயர்கள். சீவகனுக்கு முதல் மனைவி காந்தருவதத்தை மேலுலகிற் கலுழவேகன் என்ற
விஞ்சையன் புதல்வி; இசை பாடுவதில் இணையற்றவள் : எழிலிலும் சிறந்தவள்.
ஆதலால் அம்மன்னனுக்கு உரிய காதலியாய்ப் பேர்பெற்றுச் சிறப்படைந்திருந்தாள்.
இத்தகைய சிறப்பு 'தத்தை' என்னும் நின் பெயரால் வந்தது எனக் கற்பித்துப் பெருமை
காட்டியது இது.

10, 11 : பிறந்தவர் ஆரும்........பிழையன்றோ

   (சொ - ள். ) மனிதராகப் பிறந்தவர் எல்லாரும் எல்லாப் பறவைகளுக்கும்
திருமால் பெயரையும் சிவன் பெயரையும் சொல்லும்படி கற்பி்த்தால் அது
பிழையல்லவோ? (உனக்குத் தான் அவர்கள் பெயரைக் கற்பிக்க வேண்டும்.)

   (வி-ம்.) அரங்கா ! அரங்கா ! என்றும், சொக்கா! சொக்கா ! என்றும் உனக்குக்
கற்பித்தால் அப்பெயர்களைச் சொல்லியபடியே நீ சொல்வாய். மற்றைப் பறவைகளுக்குச்
சொன்னால் அவைகள் உன்னைப்போல் பேசமாட்டா. கிளி 'ரங்கா ரங்கா' என்று
கூறுவது எவர்க்கும் தெரிந்தது. சொக்கர் எனக் கூறுவதை "புழுகுநெய்ச் சொக்கர்
அபிடேகச் சொக்கர் கர்ப்பூரச் சொக்கர் அழகிய சொக்கர் கடம்ப வனச் சொக்கர்
அங்கயற்கண், தழுவிய சங்கத் தமிழ்ச் சொக்கர் என்றென்று சந்தத நீ, பழகிய சொற்குப்
பயன்றேர்ந்து வாவிங்கென் பைங் கிளியே" (மதுரைக். 54) என்பதனால் சொக்கர்
எனவும் கிளிக்குக் கற்பிப்பர் எனத் தெரிகின்றது.

11, 12 : நேர்பெறு விவேகி ....... உண்டோகாண்

   (சொ - ள்.) ஒழுங்கு பெற்ற அறிவுடையவன் தன் உடம்பாகிய ஒரு கூட்டை
விட்டு மற்றோர் உடம்பாகிய கூட்டினும் புகுவான்.