பக்கம் எண் :

64அழகர் கிள்ளைவிடு தூது


அவ்யோகியும் உனக்கு ஒப்பாவானோ? (ஆகான்.) காண் : அசை ; பார் எனவும்
பொருள் கூறலாம்.

   (வி - ம்.) யோகி தன் உடம்பைவிட்டு நீங்கிய உயிர் ஆகிய அருவப் பொருளாய்
ஒருவருக்குந் தோன்றாது வேறு கூட்டிற் புகுகின்றான். அவன் மறு கூட்டிற் புகுந்ததை
உண்மை யறிஞரே கண்டுகொள்ள இயலும் ; மற்றையோர் காண இயலாது. நீ உன்
உடம்புடனே மறுகூட்டிற் புகுகின்றாய், எல்லாரும் அறியும்படி நிகழ்கின்றது உன்
செயல். ஆதலால் நீ யோகியரினும் உயர்ந்தாய் என்றபடி இது.

12-14 : நீ கீரம் ஆகையால் .........ஆகாயோ?

   (சொ - ள்.) நீ கீரம் என்னும் பெயருடையாய் ; ஆதலால் ஆடை உனக்குண்டு :
பாடகமும் நீ கொண்டிருப்பாய் ; காலாழியும் நீங்காமலிருப்பாய்; கற்புடையாய் ;
காமனையும் சேர்ந்திருப்பாய்; ஆகையால் அன்புடைய பெண் கொடி நீ ஆவாய்
அல்லையோ? (நீ ஒரு பெண்கொடியே யாவாய்) என்பது.

   (வி - ம்.)
கீரம் என்பது பாலுக்கும் கிளி்க்கும் பெயர். அதனாற் பாலுக்கு
ஆடையுண்டு. உனக்கும் ஆடை யுடுத்துகின்றனர். அதனால் உனக்கும் ஆடையுண்டு
எனத் தெரிகிறது. பாடகமும் காலாழியும் உனக்கும் பெண்கள் அணிந்து
அலங்கரிக்கின்றனர் தம்மைப்போலவே. 'ஏகாத கற்புடையார் மாதர் - நீங்காத கற்பு
உடையவர் பெண்கள் ; ஏகாத கல்புடையாய் நீ ஒருவரும் போகமுடியாத கல்லின்
பக்கத்திலிருப்பாய் ; காமனையும் சேர்வார் மாதர் - மன்மதனைச் சேர்ந்திருப்பார்
பெண்கள் ; நீ காமனையுஞ் சேர்வாய் - நீ சோலையாகிய வீட்டைச் சார்ந்திருப்பாய்,
எனப் பெண்களுக்கும் கிளிக்கும் சொல் ஒப்புக் காண்க. மன்மதனையும் மாதர்
சேர்ந்திருப்பர் என்ற கருத்து மன்மதன் ஆசையுண்டாக்கும் தெய்வம் ஆதலால்
அவனைச் சார்ந்திருப்பர் என்பது காதலுடனிருப்பர் என்பதை யுணர்த்தும். அன்றியும்
கன்னியர் காமனைத் தெய்வமாக வணங்கி நற்காதலனைத் தருமாறு வேண்டுவர்
என்பதையும் உணர்த்தும் ; மாதர் காமனுக்குப் படைவீரர் ஆதலால் அவனைச்
சார்ந்திருப்பர் என்பதையும் உணர்த்தும்.

14-17 : பொற்புடையோர் துன்னிய ........உண்டோகாண்

   (சொ - ள்.) நற்குணமுடையோர் சென்று அடையும் சாயுச்சிய பதவியொன்று
இன்ப வுருவமுடையது.