பக்கம் எண் :

ஆராய்ச்சி உரை7


விடு தூது இருப்பதெனத் தெரிகிறது. இவற்றிற் கிலக்கணம் வகுத்தவர் யாவர்?
எவ்விலக்கண நூலில் இங்ஙனம் வரையறையின்றிப் பாடுவதற்கு விதிவகுத்துள்ளது? என
ஆய்ந்தால் ஒன்றும் இன்றெனவே உரைக்கலாம். புலவர் தத்தங் கருத்திற்கியைந்தவாறு
பெயரிட்டுப் பாடிப் பரிசிலும் புகழும் பெற விழைந்தனர் போலும்.
 
   பாட்டுடைத் தலைவன் பவனி கண்டு காதல் கொண்டு மயங்கிய காரிகை யொருத்தி
தன் கருத்தைத் தூதுக்குரிய ஒரு பொருளிடம் கூறியிருப்பதாகப் பொருளமைத்துப்
பாடுவதே சிறந்த தூது நூலாகும். அப்பொருள் தூது கூறித் தொடை வாங்கி வரும்
இயற்கையுடையதா   என்பது   ஆராய்ச்சிக்குரிய   தன்று.    அஃறிணைப்
பொருள்களையேயமைத்துப் பாடுவது விதியாதலால் அப்பொருள் செல்லும் பொருளும்
அன்று ;  சொல்லும்  பொருளும்  அன்று  என்பது  எவர்க்கும்  தெரிந்ததே.
காமமயக்கத்தாற் கன்னியர் தங்கருத்தி லொருபொருளைக் குறித்து அப்பொருளிடம்
காதலைக் கூறுவதுதான் அமைந்த பொருள். ழுதூது சொல்லி வாழு என்பது இதன்
முடிவு. அஃறிணைப் பொருள்களிற் பேசும் ஆற்றல் சிறிது பெற்றது கிளி. அதனைத்
தூது விடுத்த பொருளமைந்த நூல் இது. ஆதலால், மற்றைத் தூது நூல்களிற் சிறந்தது
இந்நூல் எனக் கொள்க.
   ழுஅழகர் கிள்ளைவிடு தூதுழு என்ற இந்நூலொன்றே பழைமையான தூது நூல்.
புதிதாக ழுதிருப்போரூர்க் கிள்ளைவிடு தூதுழு, ழுநாராயணசாமி பிள்ளை கிள்ளைவிடு
தூதுழு என இரண்டு நூல்கள் அண்மைக்காலத்தில் இயற்றப்பட்டனவாக அறிகின்றோம்.
வடமொழியிற் பல கிள்ளைவிடு தூது இருப்பனவெனக் கேட்கின்றோம்.
 

திருமாலிருஞ்சோலை

திருமாலிருஞ்சோலை என்பது அழகர் என்னும் தெய்வம் கோயில்கொண்டு
வீற்றிருக்கும் பதியாகும். திருமால் -