இரண
இரணிய வதைப் பரணி
காப்பு
தேன்அ றாமகிழ்த் தொடையலும்,
மவுலியும்,
திருக்கிளர் குழைக்காதும்,
கான்அ றாமலர்த் திருமுகச்
சோதியும்,
கயிரவத் துவர் வாயும்,
மோனம் ஆகிய வடிவமும், மார்பமும்,
முத்திரைத் திருக்கையும்,
ஞான தேசிகன் சரணதா மரையும்என்
நயனம்விட்டு அகலாவே.
நம்மாழ்வாருடைய திரு உருவத்தை முடிமுதல் அடிவரை நம்
கண்முன் ஆசிரியர் நிறுத்துகிறார்.
எம்பெருமான் திருமகளுக்கும், திருமகள் சேனைநாதனுக்கும்
பரமபதத்தில் உபதேசம் செய்தனர் எனவும், சேனைநாதன் நம்மாழ்வாருக்கு உபதேசம் செய்து நம்மாழ்வார்
வழியாக அரிசமயம் இவ்வுலகில் பரவியது எனவும் குருபரம்பரை கூறும். ஆதலின், இவ்வுலகிற்கு ‘ஞான தேசிகன்’
நம்மாழ்வார்.
‘திருக் கிளர் குழைக் காது’ எனக் காதுக்கு அடைமொழி
தந்தது கேள்விச் செல்வத்துக்கு இடமான புலன் ஆகையால்.
1. கடவுள் வாழ்த்து
ஆழிப்படை
ஆரணமும் பங்கயத்துள் அயனும்
போற்ற,
அக்கயத்துள் ஒருகயம்நின்
றழைத்த அந்நாள்,
சூர்அணவு முழுமுதலை துணித்த வென்றிச்
சுடராழி நெடும்படையைத்
தொழுதல் செய்வாம்:
(1)
“திரண்டுஉலகம் பலகாணச் செம்பொன்
தூணில்
சிறுமதலை பெருமைதலைச் செய்ய
வேண்டி,
இரண்டுஉருவின் திருஉருவாய் வந்து
தோன்றும்
எங்கள்பிரான் இனிதுஊழி
வாழி!” என்றே.
(2)
சிறு மதலை’: பிரகலாதன். ‘பெருமை தலைச்செய்ய’:
பெருமையை உணர்த்த. ‘இரண்டு உருவில் திரு உருவாய்’: மனிதன், சிங்கம் என்ற இரு தோற்றங்களில்
சிறந்த உருவம் அமைந்து.
‘எங்கள்
பிரான் வாழ ஆழிப்படையைத் தொழுவோம்’ என இயைக்க. அவ்வாறே, மேல் வரும் சங்கு, வில்,
வாள், தண்டுக்கும் கொள்க.
|