இரணிய வதைப் பரணி

44

நூல

    நூல் முழுவதையும் பார்த்து, புலவர் திருவாளர் வி. மு. சுப்ரமணிய ஐயர் அடியேனுக்குப் பல விளக்கங்களை அருளினார்.

    ‘ப்ரூப்’ பார்க்கும் பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுத் திறமையுடன் ஆற்றியவர் பேரூர் தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர் புலவர்கள் திருவாளர் முத்துக்குமாரசாமி யும் திருவாளர் சென்னியப்பனும்.

    இந்நூலைத் தமிழ் உலகம் காண்பது இவர்கள் அனைவருடைய முயற்சியாலே ஆகும்.

    பதிப்புரையிலும் குறிப்புக்களிலும் ஆராய்ச்சி முடிவாகாத கருத்துக்களைத் தேர்ந்த முடிவுகளாக எழுதியுள்ளேன். அவற்றைப் பெரியோர் பலருடன் ஆய்ந்தேன் எனினும், எழுத்துக்கு அடியேனே பொறுப்பு. அவற்றில் தவறுகள் இருப்பின் அக்குற்றம் அடியேனையே சாரும்; நயங்கள் அனைத்தும் மேற்குறித்த பெரியோருக்கே உரியவை.

தாசநாயக்கன் பாளையம்                      நா. வரதராஜுலு நாயுடு

  வைகாசி விசாகம்

    4 ஜுன் 1974