புலர
புலர்ந்த போது குவிந்து மாலை
புணர்ந்த போது மணம்கொளா
மலர்ந்த தாமரை கொண்டுஉலாவு
மடந்தை மீர்! கடை திறமினோ!
(49)
புலவியின் வெப்பத்தாலே வாட்டம் அடைந்து
புணர்ச்சியில் மணம் கொண்டு மலர்ந்தது, மகளிர் முகமாகிய தாமரை.
பிழையி லேம்என வந்த காதலர்
பெருகு மம்மரின் உழலவே
உழையி லேபிறழ் விழியினால்அமர்
உந்து வீர்! கடை திறமினோ!
(50)
அலரும் பகையும் மிகநடந்தது;
அந்தி மாலை நீங்கியது,
புலரும் பொழுது மறந்திருப்பீர்!
புனைபொற் கபாடம் திறமினோ!
(51)
* பேணும் கொழுநர் பிழைகள்எலாம்
பிரிந்த பொழுது நினைந்து,
அவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்!
கனபொற் கபாடம் திறமினோ!
(52)
‘காணுங்கால் காணேன் தவறாய; காணாக்கால் காணேன்
தவறல்லலவை’ (‘குறள்’)
பெருமாள் அரங்கர் வரைமார்பும்
பெரிய தோளும் முழுதுடைய
திருமா மடந்தை கழல்பணிவீர்!
செம்பொற் கபாடம் திறமினோ!
(53)
* ஆளும் கொழுநர் வரவுபார்த்து
அவர்தம் வரவு காணாமல்,
தாளும் மனமும் புறம்பாகச்
சாத்தும் கபாடம் திறமினோ!
(54)
அலையும் புனல்சூழ் அரங்கர்படை
அடையக் கடந்த அயில்அம்பும்
சிலையும் கிடந்த திருமுகத்தீர்!
செம்பொற் கபாடந் திறமினோ!
(55)
‘அம்பு’ கண்ணையும், ‘சிலை’ புருவத்தையும்
குறிக்கும்.
* இத்தாழிசை கலிங்கத்துப் பரணியிலும் காணப்படுகிறது.
|