கனவ
கனவில் வந்ததொரு புலவி கொண்டு,
விழி
கடைசி வந்தபடி அறிகிலார்;
வினவி, அன்பர்அவர் அடிவணங்க,
மிக
வெகுளும் மங்கையர்கள்!
திறமினோ!
(42)
கண்கள் சிவப்பது கலவியால். கலந்தது அறியாது, இன்னமும்
புலந்தவராகவே தம்மை எண்ணுகிறார் இப்பெண்கள்.
உரைகள் வேறுஎன உடல்கள் ஒன்றுஎன
உறவு செய்கையின் உணர்வுபோய்,
வரைகள் போல்திரள் தோளி
லேமிக
மயங்கு வீர் கடை திறமினோ!
(43)
* வாச மாமலர்கள்
மார்புதோய, மது
மாலை தாழ்குழலில் வண்டுஎழுந்து
ஊசல் ஆட, விழி பூசல் ஆட உற
வாடும் மாதர்! கடை திறமினோ!
(44)
ஆளும் ஏழ்உலகு காதல் கூர அழ
கானை மேல்வரும்அ ரங்கர்பொன்
தோளும் மாலையும்வ ணங்கி நின்றுவிழி
சோரும் மாதர்! கடை திறமினோ!
(45)
தேர்உ லாவும்மணி மாட வீதிவரு
தென்அ ரங்கரொடு சிந்தைபோய்
ஊர்உலாவர, மறங்கொள் வேல்விழி
உறங்கும் மாதர்! கடை திறமினோ!
(46)
அன்று போனதனி நெஞ்சமேஅல
அரங்கர் பால்அணி கலங்கள்தாம்
இன்று போனவையும் நின்றவாம்என
இரங்கு வீர்கள்! கடை திறமினோ!
(47)
காதலால் உடல் மெலிந்து அணிகலன்கள் சோர்ந்தன.
முன்பு சென்ற நெஞ்சோடு, இவ் அணிகலன்களும் காதலர்பால் சென்று அங்கு நின்றன, என்கிறார்.
தொடையி லேவசம் அழிய வென்ற
துரங்க வீரர் அரங்கனார்
உடையிலே, அவர் நடையிலே,
மனம்
உருகுவீர்! கடை திறமினோ!
(48)
*இத்தாழிசை
கலிங்கத்துப் பரணியிலும் காணப்படுகிறது.
|