இன
இனி வருபொருள்
உரைப்பார்.
அல்லும் பகலும் அடுபடையால்
அழிவொன் றில்லா இரணியனைக்
கொல்லும் பெருமாள் கதைபாடக்
கோலக் கபாடம் திறமினோ!
(56)
கடுத்துச் சிவந்த விறல்பொன்னன்
கனகத் தூணில் அடித்தகரம்
பிடித்துப் பிளந்த கதைபாடப்
பிணைபொற் கபாடம் திறமினோ!
(57)
கேட்டற் கரிய மறைப்பொருளைக்
கிளர்பொன் தூணில்,
ஒருசிறுவன்
காட்டத் துணிந்த கதைபாடக்
கனபொற் கபாடம் திறமினோ!
(58)
தாமம் கிடந்த வனமுலைஊர்
தடக்கை உகிரால் இரணியனைத்
தாம்அங்கு இடந்த கதைபாடத்
தகைபொற் கபாடம் திறமினோ!
(59)
‘ஊர் தடக்கை’: வீரம் பாடும் இடத்தில் நரசிங்கப்பிரானின்
காமச்செயலைக் கவி கூறுவது படிப்போருக்கு வியப்புத் தரலாம். காவியத்தின் இப்பகுதி கடைதிறப்பு;
மேலும், மாசு கவியின் சிசுபாலவத காவியத்தில் நரசிங்கப்பெருமான் இரணியன் உரம் கீண்டது
பிராட்டியின் தனங்களை வருடிய கர நகங்களால் என்கிறார் (1.47); உரையாசிரியர் மல்லிநாதர்
அந்நகங்கள் மென்மையையும் வச்சிரம் போன்ற கடினத்தன்மையையும் ஒருங்கே பெற்றுள்ளமையை வியக்கிறார்.
அடியிற் பணியா அவுணேசன்
அழன்று நெருங்கி ஆள்அரியார்
மடியில் துயின்ற கதைபாட
மாடக் கபாடம் திறமினோ!
(60)
|