3
3. காடு பாடியது
அழல்கண் கனற்ற எயிறுதொறும்
ஆலம் சொரிய, ஆடல்பயின்று
உழல்கங் கணத்தாள் தன்கணத்தோடு
உறையும் காடு
பாடுவாம்.
(61)
அடர்புன்கு தொடர்சூரை அழல்சுள்ளி
விழல்வெள்ளில் அதர்சேர்
உகாய்
படர்இண்டு களவீரை பலவன்னி
எனஇன்ன பலதுன்னுமே.
(62)
முதிர்கள்ளி, முரிமுள்ளி, முதல்வாகை,
முதல்ஈகை, முட்காரைவேல்,
வெதிர்நெல்லி, விடத்தேறு,
வெட்பாலை,
அப் பாலை வெளியெங்குமே.
(63)
இவை பாலைவன மரங்களின் பெயர்கள்.
மழைகுன்றி, மரல்வெந்து, பரல்வெம்பி,
மரம்ஒன்றும் நிழல்இன்றியே,
இழைகின்ற கழைநின்ற இடமெங்கும்
எரி மண்டி எழுகின்றதே.
(64)
மீன்வீழ்வ தெனவந்தி உலகெங்கும்
வெளியாக விழுகின்றது-அக்
கான்மீது கழைவாடு தழைவெந்து
நெடுவானில் எழுகங்குஅரோ.
(65)
பாலைவனத்தில் வாடிய மூங்கில்களும் தழையும் வெந்ததால்
எழுந்த தீப்பொறிகள் ( கங்கு ) உலகு முழுவதும் நட்சத்திரங்கள் விழுவபோல விழுகின்றன. அரோ :
அசை.
தீய்ந்துமரம் கரிந்துஉலறித் திருகுசின
வெயில்பருகிச் சிதைந்து
கானம்
காய்ந்துநிறம் சிவந்ததெலாம்,
கடுஞ்சூறை
தொடர்ந்துஎழுந்த கனலால்
அன்றோ?
(66)
பகல்வாழும் கதிரவனும் பனிமதியும்
பலகாலும் பவனி போந்தும்
அகல்வானம் நிறம்இருண்டது,
அந்தவனத்து
எழுந்தஅனல் புகையால் அன்றோ?
(67)
இரவியும் மதியும் பவனிசென்றும் ஆகாயம் இருண்டுள்ளது அப்
பாலை வனத்தில் எழுந்த புகையாலே.
|