தூம
தூம வெஞ்சுரத் திடைகருங்கொடி
தொடர நின்றுநின்று
உலறுகள்ளி, நேர்
தீமை செய்திடும் கொடிய பேய்களைத்
தேவி வைத்தவெஞ் சிறையை
ஒத்ததே.
(68)
கருங்கொடிகள் கள்ளியைச் சிறை செய்தன.
நெறிமயங்கிஓர் நீர்மை இன்றியே
நின்ற புன்மைசிக் கென்ற
தன்மையால்,
வறிய வெஞ்சுரம், பொருள்வி
ரும்பிவாழ்
வஞ்ச மாதரார் நெஞ்சம்
ஒத்ததே.
(69)
கம்பன் தாடகை வதைப்படலம் 8, 15.
மண்வெ டிக்கவே மழைவறண்டகான்
விண்வெ டிக்கவே வேய்வெடிக்குமோ?
(70)
விரவி உக்கவேய் முத்தை, வெவ்வனத்து
அரவு, ‘முட்டை’ என்று அருகு
அணைக்குமே.
(71)
தோகை ஆடும்அச் சுரம் அடங்கலும்,
கூகை பாடுவெங் குரல் பரந்ததே.
(72)
ஊமன் வெங்குரல் பரந்த ஓசை,
வெயில்
ஊடு நின்றுஉடல் பிளத்தலால்,
ஈம வெஞ்சுரம் உளைந்து உளைந்துமிக
எய்த்து இரங்குகுரல் ஒத்ததே.
(73)
புகைந்து எழுந்துஎரி பரந்த
கான்எரி
பொறுக் கொணாதுஅடி
சுறுக்கொளா,
உகைந்து எழுந்துமிசை தாவி ஆவியொடு
உழைக்குலம் பல உழைக்குமே.
(74)
எம்மைஆளுடைய அம்மை கானில்இனி
யாவர் சென்றுஅணுகு வார்?
அதன்
வெம்மையால்அலறி வானில்
ஓடும்மழை
மேக சாலம்நிறம் வெளிறுமே!
(75)
ஒருவ ரால்அணுக அரிய கானில்இனிது
ஓடி ஆடுவன, மோடி தோள்
மருவு காதலர் தரித்தமானும்இள
மைந்தன் ஏறும்மட மயிலுமே.
(76)
அப்பாலையில் விலங்கு, பறவை என உள்ளன, காளியின் காதலர்
சிவபெருமான் தரித்த மானும், அவள் மைந்தன் முருகன் ஏறும் மயிலுமே.
|