எண
எண்ணில் கோடிச ராசரங்கள்
இருந்து செய்த அருந்தவன்
விண்ணின் மேலும்ஒர் ஆறு கண்டனன்
வெஞ்சுரத்து அழல் அஞ்சியே.
(77)
‘அருந்தவன்’: பிரமன். அத்தழல் தன்னைத் தீண்டாதவாறு
பிரமன் ஆகாய கங்கையை ஏற்படுத்திக்கொண்டான்.
ஆரும் வெவ்வழல், அஞ்சியோவிரி
அண்டம் ஓடுவன ஆறெலாம்!
பாரில் வெஞ்சுரம் அஞ்சியோ
பிலதானம் வீழ்வன
பரவையோ!
(78)
ஆறுகள் நில்லாமல் ஓடுவதும், கடல் பூமிக்கு அடியில்
புகுவதும் இந்தப் பாலை நில வெப்பம் தாங்காமலே..
வண்டுமேவிய தண்து ழாய்புனை
மாயன்முன் எழு பாரெலாம்
உண்டு மீள உமிழ்ந்தது அச்சுரம்
உற்ற வெம்மை பொறாமையே.
(79)
உலகம் உண்ட திருமால், அதை மீண்டும் உமிழ்ந்தது ஏன்?
அப்பாலைவனத்தின் வெம்மையைப் பொறுக்கமாட்டாது. ‘மால் விழுங்கி உமிழும்படி வந்த வெம்பாலை’
( பழமலை அந்தாதி )
மையுலாவிய கண்டர் கால்கள்
சிவந்தது அந்த மடந்தைவாழ்
வெய்யகானில் நடந்த தென்பது
வேத மேமிக
ஓதுமே.
(80)
சிவபெருமான் கால்கள் ஆடிச்சிவந்தன அல. இப்பாலையில் தன் தேவியைத்தேடி நடந்ததால் சிவந்தன
|