பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

15

4

4. கோயில் பாடியது.

            *       *        *        *

            *        *        *        *

        கொவ்வை அங்கனிவாய் அணங்குஉறை
            கோயில் உண்டுஅது கூறுவாம்.             
  

(81)

        துத்தி நாக ராசன் மௌலி
            சோர்வு றாமல், நாலிரண்டு
        அத்தி பாரம் உற்ற பின்பு,
            அடித்த லம் படுத்ததே.                       

(82)

    ஆதிசேடன் பூமியைத் தாங்குவதில் சோர்வுறாமல், எட்டு திக்கு யானைகள் இவ்வுலகின் பாரத்தை ஏற்றன. கோயிலுக்கு அடித்தலம் ( Plinth ) உண்டாக்கியவர் அதன் பாரத்தை அவ் எட்டு யானைகளுக்கும் சமமாகப் பங்கினர்.

        படுத்து யர்ந்த சமதலத்தின்
            மீது பாத சிலைபிடித்து
        எடுத்துயர்ந்த பித்த அண்ட
            பித்தி அல்ல தில்லையே.             
       

(83)

    ‘பாதசிலை’: தூண் அடி. கம்பன், மயேந்திரப் படலம் 29.

        முட்டும் ஏழு நிலைவ குத்து, மூரி வான முகடு அளந்து,
        எட்டு மால் வரைக்குலங்கள் இடையில் நின்ற தூணமே.    

(84)

        தன் பரப்பு நின்றிலங்கு தார கைக்கு லங்களே,
        முன்பு அமைத்த மண்டபத்து முத்தணிந்த பந்தரே.         

(85)

        வட்டமாக விட்ட நீடு புரிசை, நேமி வாளமே;
        விட்ட வாசல், நாடு பாடும் வெயில் நிலாவு திசைகளே.       

(86)

        சிகர பாரம் அதனி னூடு சீறி ஓதம் ஏறும்நீர்;
        மகர வாரி வேலை ஏழும், மஞ்ச னம்செய் வாவியே.        

(87)

    திரு மஞ்சன நீர் ஏழு கடல்கள்.

        கார்உலாவு பொழில்கள் ஏழு கணவ ரோடு பலியிரந்து
        ஊர்உலாவி வந்த பின்பு உலாவும் நந்த வானமே.        

(88)

    கொற்றவையும் தன் கணவனோடு பலி இரக்கிறாள். ‘நந்தவனம்’ நீண்டு ‘நந்தவானம்’ ஆயிற்று.