New Page 1
வேலை வாய் எழுந்து வானின் மீது லாவும்
இருவரும்,
காலை மாலையும் புகுந்து கைவிளக்
கெடுப்பரே.
(89)
‘இருவர்’: சந்திர சூரியர்
பயிரவிதன் கோயில்இது பரிவார மாமடமாது
உயிர்அவிஇன் பலி கொள்வது,
ஒரு பீடம் முன்உளதாம்.
(90)
அப்பீடத்து அலைகுருதி
அளற்றில்அடி வழுக்குவன
மெய்ப்பீடத்து எழுந் தெழுந்து
மிறைத்தாடும் குறைத்
தலையே.
(91)
கரவில்வெஞ்சுரம் மருவி வென்றிகள்
கருதி நின்றுஅடி தொழுதுமுன்
பரவி, மங்கையை வரமிரந்தவர்,
‘பலிகொள்’ கென்றுஎதிர்
வருவரே.
(92)
‘கரவில் வெஞ்சுரம் இருந்து. . . . . . வரம் இரந்தவர்’:
பாலைவனத்தில் இருந்து வஞ்சம் அற்ற ( கரவு இல் ) வெற்றிகளை வேண்டியவர்.
ஒருகை வன்தலை திருகுமே; கடிது
ஒருகை சென்றுமிடறு அரியுமே,
அருகு நின்றவர் அரிப சுந்தலை
ஆவலம்கொடு அழைக்குமே.
(93)
அடலருந்திறல் நினைவுடன்சிலர்
அரிப சுந்தலை பலிகொடுத்து
உடல் வலம்செய, வரஇருந்தவை
‘ஒன்று, இரண்டு’ என எண்ணுமே.
(94)
‘வர இருந்தவை. . . . . . எண்ணுமே’:
இனி, தலை அரிந்து கொடுக்க வரப் போவார், அரிந்த தலைகளுடன் முண்டமாக வலம் வருவோரை,
‘ஒன்று, இரண்டு’ என எண்ணுவர்.
மிகஇருந்த மரங்கள்தொறும் அரிந்தரிந்து
விடுசிரங்கள் விடாதுஎப்போதும்
உகுகுருதிச் செம்புனலின்
பசுமையுடன்
உணங்காமல் தூங்குமாலோ.
(95)
அரியப்பட்ட தலைகள் மரங்களில் அசையும்; அவற்றினின்று
எப்போதும் புதிய இரக்கம் சிந்தும்; செம்புனலால் மரங்கள் உலராது பசுமையாக இருக்கும்.
|