தண
தண்டலைவாய்ப் பனங்கனிகள் உதிர்ப்பனபோல்,
தழைமரங்கள் தமக்குஎட்
டாமல்,
வெண்தலையால் சிலகரும்பேய்
பசுந்தலைகள்
வீழவிசைத்து எறியு
மாலோ.
(96)
பனம் பழங்களை வீழ்த்தக் கல் எறிவது போல, தொங்கும்
தலைகளை வீழ்த்தச் சில கரும் பேய்கள் தலை ஓடுகளை வீசும்.
எறிய, விழும் தலைஒருபோய் எடுக்கு
மாலோ;
எடுத்தன, கைப் பிடித்துஒருபேய்
பறிக்குமாலோ;
பறிபடுகின் றெனப்பலபேய்
அலறு மாலோ;
பயிரவிகள் இவைஇவைபார்த்
திருக்கு மாலோ.
(97)
இனி, பைரவர், யோகினியர் இடாகினியர் என்ற கணங்களைப்
பாடுகிறார்.
அமர்உகக் கடை யுகத்துஅ சனி ஒத்துஅதிர்குரல்
தமருகத்தினர் எனத்திரிவர்
பைரவர்களே.
(98)
இசைப டப்பட மிதித்திடுந டத்
தொழில்களில்
திசைகள் எட்டு இசை வுறத்திரிவர்
பைரவர்களே.
(99)
கலக மிச்சிரர் உடற்கரிய
சட்டையர்; நுதல்
திலகம்இட்டுஅழ குறத் திரிவர்
பைரவர் களே.
(100)
‘கலக மிச்சிரர்’: தம்முள் மாறுபடும் கலப்புச் சாதியினர்,
மிச்சிரர் கருஞ் சட்டை அணிவார்; திலகம் அணியார். அவர்களுக்குத் திலகம் இட்டு அழகு பார்ப்பர்
பைரவர்.
நெடிய வாள்எயிறு கால்நிலவி னால்அழகுறா,
வடிவெ லாம்அரவு போல்வருவர்
பைரவர்களே.
(101)
வெண் பல்லின் ஒளி மேனி முழுவதும் பரவுவதால் சட்டை உரித்த
பாம்பு போலே வருவார்.
வெட்டி வந்துஎதிர் வீழப் பசுந்தலை
இட்டு இறைஞ்சுவர் யோகினி
மாதரே.
(102)
உடையும் நாணும் உவமையும் ஒல்குமெல்
இடையும் இல்லவர், யோகினி
மாதரே.
(103)
யோகினி மாதருக்கு உடையும் இல்லை; நாணமும் இல்லை;
அசைகிற இடையும் இல்லை; அவர்களுக்கு ஒப்பானவரும் இல்லை.
வெண்ணிலா நகை யாளை விடாதவை
எண்ணில்
கோடி இடாகினி மாதரே.
(104)
|