பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

18

5

5. தேவியைப் பாடியது

        சூழ நின்று தொழுதுஇவர் போற்றிட,
        வாழும் மங்கை வடிவமும் சொல்லுவாம்.       
    

(105)

        சுத்தவிசைப் பித்தர்முகச்
            சொக்கருகத் தக்கதொழில்
        பத்தர்மனத் துப்பயில் பொற்
            சித்திரபற் பத்தினளே.                     

(106)

    இசைப்பித்தர், முகச் சொக்கர், தொழில் பத்தர் என்பன சிவபெருமானைக் குறிக்கும். அவருடைய மனத்தில் பயிலும் சித்திர (அழகிய) பற்பத்தினள் (பத்மம் போன்றவள்) தேவி.

        விற்பவளக் கொப்பில் வகுப்
            பித்தவிரற் பத்திமிசைப்
        பற்பலமுத் துக்க நிரைத்
            தொக்கும்நகப் பத்தியளே.                     

(107)

    பவளத்தால் இயன்றனவோ எனக் கருதத்தக்க விரல்கள்; அவற்றில் முத்துக்களின் வரிசை போன்ற நகங்கள். கொப்பு - கொம்பு.

        செற்றதிறல் கொத்தசுரச்
            செச்சைநிறப் பச்சுதிரத்து
        உற்றபணிப் பொற்றுகில்ஒப்
            பித்தஉடைப் பொற்பினளே.                

(108)

    அசுரரை வென்ற திறனுக்கு ஏற்ற உதிரச் செம்மை நிற உடையினள். உடை இளஞ் செம்மையோடு பொன் நிறமும் வேலைப்பாடும் கொண்டது.

        அக்குவடக் கொத்து கள்இட்டு
            அர்க்கனெனச் செக்கர்வெயில்
        கக்குவிடக் கட்செவியிற்

            கட்டுமுலைக் கச்சினளே.                   
 

(109)

    எலும்பு மாலையும் விடம் கக்கும் பாம்பாகிய முலைக்கச்சும் உடையவள்.

        எட்டுளபொற் கைப்படை எட்
            டில், பணிலத் துக்கு இசையத்
        தொட்டதிடத் துக்கை வலத்

            துச் சுழல்சக் ரத்தினளே.        
            

(110)

    இடபால் சங்கமும் வடபால் சக்கரமும் தரித்தவள். திருமாலைப் போலவே துர்க்கைக்கும் சங்கும் சக்கரமும் உடைமை தக்கயாகப் பரணியிலும் ( 164-5 ) கூறப்பட்டுள்ளது.