வட
வட்டமதிச் சித்ர முகத்
துக்குஅயல்மைக் கண், குருதிப்
பொட்டுநுதல், சற்ப ணிலப்
பொற்குழைவர்க் கத்தினளே.
(111)
‘அயல் மைக்கண்’: அருகில் உள்ள மையுண்ட கண்.
கொக்கிறகு, ஒற் றைப்பிறை, அப்
புற்றரவக் கொத்தடையப்
புக்குறைசெக் கர்க்குடிலப்
பொற்சடிலக் கற்றையளே.
(112)
‘செக்கர் குடில பொற் சடிலக் கற்றை’: செவந்த, சுருண்ட, அழகிய சடைக்கட்டு
ஆகாசம் திருமருங்குல்,
அதிபார வனமுலைமேல்
ஏகாசம் தலைமாலை,
இனி வேறுஎன் இயம்புவதே!
(113)
ஆகாசம் திருமருங்குல்’: வெளி உடைய இடை.
அருளேதன் திருமேனி
ஆரணங்கள் ஒருநான்கின்
பொருளே தன் திருத்தொழில்கள்,
புகழ்என் என்று இயம்புவதே!
(114)
|