பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

21

New Page 1

        வெட்டு வெட்டென நெட்டைகள் போதவே,
            விலாவிற் கைவைத்து உலாவும் உலாவின;
        பட்ட பட்டினி விட்டுவி டாதன;
            பசிக்கெ லாம்ஒரு பாசனம் ஆவன.             

(122)

        வந்து வந்துஉடனின்று அழும்பிள்ளைப்பேய்
            வற்றல் மாமுலை பற்றி இசித்திட,
        நொந்து முன்சில சூலிட்ட பேயினை
            நோக்கி நோக்கித்தன் நாக்கினை மெல்வன.        

(123)

    பிள்ளை பசியால் தாயின் வற்றிய முலையை இழுக்கிறது. தாய் நொந்து, தனக்குச் சூல் உண்டாக்கிக் காப்பாற்ற இயலாத கணவனை நோக்கி வாயை மடித்து உருமுகிறது.

        மலைப்பேய் கடல்பேய் வனஞ்சூழ
            லுட்பேய் அழற்போல் வரும்
        கொலைப்பேய் வெதுப்பேய் குளிர்ப்பேய்
            எனத்தேவர் கொண்டாடுபேய்.                 

        (124)

        கற்கும் கலைப்பேய் கவிப்பேய்
            கதத்தே பிதற்றிப் பொருள்
        தற்கம் செயும்பேய் தவம்செய்து
            சாலத் தரம் பெற்றபேய்.                     

(125)

        வன்பேய் கரும்பேய் வருந்தா
            எழுந்தே வழிக்கே வரின்
        பின்பே வரும்பேய் பெரும்பேய்
            எனச்சிந்தை பேயானபேய்.           
        

(126)

        எப்பேய்க ளும்பேய்கள் என்றாலும்,
            இவைபோல் இயம்பொண்ணுமோ?
        கப்புஆய திண்சூல் கரத்தாள்,
            அழைத்தாள் கணப்பூதமே.                    

(127)

‘கப்பு ஆய திண் சூல்’: கிளைகளை உடைய திண்மை வாய்ந்த சூலாயுதம்

        கலைவளர் பிறையணி சடையன;
            கரியுரி யுடையவன் விடையன;
        மலையென, மறிகட லென, மழை
            பொழிமுகி லெனவரு குறள்களே.                 

(128)