பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

22

வட

        வடவையில் எரிவிழி சுழல்வன;
            மதகரி நுகரினும் அவியலா
        குடவயி றொருபுடை மெலிவொடு
            குழைவன, சிலசில குறள்களே.                 

    (129)

    ‘மதகரிநுகரினும்’: யானையைத் தின்றாலும்.

        முருகவிழ் இதழியின் இதழ்விரி
            தொடையன; முசலமொ டெழுவன;
        உருகெழு படையன; திருவருள்
            உடையன, சிலசில குறள்களே.              
  

(130)

        சுரும்புஊது மலரடிகள்
            தொழுதிறைஞ்ச, எப்பொழுதும்
        பெரும்பூதம் ஒருகோடி
            பிரியாது நிற்பனவே.                         

(131)

        ஐம்பூதம் ஒருபூதம்
            ஆயினபோன்ம் எனவந்து,
        கொம்பூதி இயம்ஆர்ப்ப
            குழல்ஊதி நடப்பனவே.                     

(132)

        நறும்பூவும் புதுவிரையும்
            நனகொணர்ந்து பணிமுயலும்
        குறும்பூதம் ஒருகோடி
            குற்றேவல் செய்வனவே.                     

(133)

    குறளும் சிந்தும் ஏவல் கூவல் பணி செய்வன.