பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

23

7

7. இந்திரஞாலம்

        இக்க ணங்கள்இரு பக்கமும்
            இருக்குடன் இருப்ப; இமையோர்
        தொக்கு, ‘அணங்கு, இறைவி’ என்றுசுர
            ராசனொடு நின்றுதொழவே,                      

(134)

        முழுகு பாலைஅழல் ஆற முளி
            வேய்கள்நிறை வேனிலிடையே,
        கழுகு பாறுநிழ லாகஇடு
            காவண வளாக நடுவே,                     

(135)

        தாரு கன்பொரு தடக்கையில்
            எடுத்தெதிர் பிடித்த கடகைப்
        பேருகம் பலவும் நிற்பதொரு
            நற்பலகை செய்த பிறகே,                     

(136)

    தாருகன்: காளியுடன் போர் புரிந்த ஓர் அரக்கன் சிலப்பதிகாரம். 20: 39-40, 158-ம் தாழிசையையும் காண்க.

        நால்வகைக்குறிய பூதரை
            இருத்திய குருத்து நவிலும்
        கால்வ குத்துஅசுரர் என்புகொடு
            கையுருவு செய்தவிசிலே,                 
  

(137)

    நான்கு வகைப்பட்ட குறு வடிவம் உள்ள பூதங்களை நிலைபெறச் செய்த கால்கள்; அவை யானைத் தந்தத்தால் ஆனவை; அசுரர் எலும்பால் இழைத்த பீடம்.

        வெஞ்சமத்துஅசுரர் குஞ்சிகொடு
            வேலவுணர் தைத்துவிடுசெம்
        பஞ்சு மெத்தைமிசை, நெட்டணை,
            பருத்ததொரு பூதம்இடவே        
             

(138)

    போரில் இறந்த அசுரர் தலைமயிரைத் திணித்து அவர் வேலால் தைத்துவிட்ட மெத்தை; ‘நெட்டணை அருகாக் கொட்டைகள் பரப்பி’ (திருவிடை மருதூர் மும்மணிக் கோவை)

        வேக நாகமணி காலும் வெயில்,
            வெண்பிறை நிலா, விரவுபூண்
        ஏக நாயகி, மகிழ்ந் தினிது
            இருந்தனள், இருந்த பொழுதே,                 
 

(139)

    நாகமணி தூண்டல் செய்யா மணி விளக்கு, தேவி தலையில் உள்ள நிலாவுடன் ஒளி வீசும்,

    134-ம் தாழிசையிலிருந்து 139-ம் தாழிசை வரை குளகம்.