பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

24

ஒல

        ஒல்லைஒரு பூதம்இரு பாதமலர்
            வந்துதொழுது, “உன்அடியனேன்
        எல்லையில்வி னோதமுள; வல்லன
            அவற்றுள்இது கண்டருள்!” எனா,    
           

    (140)

        நின்றுநெடு நாசியில்ஒர் ஊசியை
            நிறுத்தியது; நிற்க, அதன்மேல்
        ஒன்றுஒ ருபதுஓசனை உயர்ந்த சில
            குன்று நனிநின்று உழலவே,         
      

    (141)

        நெற்றிமிசை யேநெடிய சூலமுனை
            ஆலமென நின்று சுழலப்
        பற்றிமிசை ஏறிய பசாசுவிளை
            யாடல்பல வும்பழகவே,                     

    (142)

    சூலம் ஊசிமுனை அளவே ஆயினும் ஆலமரத்து அளவோ எனக் கருதும்படி அதில் ஆடல் பயிலும்.

        மேவியக போலதலம் மெத்தமணி
            முத்தினை அடக்கி, விரகால்
        நாவில்ஒரு நூலினை முறுக்கி, அது
            கோவைபட நாலவிடவே,                
    

    (143)

        தோளின்மிசை யேகுறிய சொட்டைபல
            நெட்டைஅதள் இட்ட சுடர்வாள்,
        வாளின் மிசையே பெரிய மாமுரசு
            இருந்து மழை போல் அதிரவே,                

(144)

        கைத்தலம் இரண்டினும் இரண்டுகதிர்
            வேல்முனை நிறுத்தி, அதன்மேல்
        இத்தலம் எடுப்பன இரண்டுகுறள்
            ஏறிஇழி யாது ஒழியவே,                    

(145)

        தூசிஇரு மண்டலம் இருக்கும்முறை
            சுற்றி, இரு காலும் ஒருகால்
        வீசி, உடன் ஒத்துமிடை கித்துநடை
            ஒத்தற மிதித்து வருமே.                  
  

(146)

    ‘மண்டலம் இருக்கு முறை’: வட்டத்தில் இருக்குமாறு செய்து ‘கித்து நடை’: ஒருவகை நடனம் ‘கித்தி நின்றாடும் அரிவையர்’ ( திருவிசைப்பா )