பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

25

        மடித்துஅடி ஒருத்தலின், எடுத்துஉரும்
            இடித்தென உதைத்து, மலைபோல்
        தடித்துஉடல் இருப்பினும் உருப்பெறு
            தடித்துஎன நடித்து வருமே.                 

    (147)

    ஆண் யானை காலை மடித்து எடுத்து இடிபோல நிலத்தை உதைத்து வரும். அதன் உடல் மலைபோலப் பருத்து இருந்தாலும் உருவைப் பெற்ற மின்னல்போலத் துவண்டு நடனம் புரிந்து வரும்.

        அப்படி நடித்திட, அடிக்கடி
            அதற்கிசை படித்தருளி, வேறு
        இப்படி செயற்கரிது இதற் கினி
            இலக்கிலை விலக்கு கெனவே.                

(148)