பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

27

        தாய்என்றும் மகவென்றும்
            தாரணியா ரைப்பிடித்தால்,
        பேய் என்று தீர்த்துவிடும்
            பிடாரரும்உன் பிடாரர்களே;        
       

        (156)

    ‘பிடாரர்’: குறப் பேய்கள், பேய் ஓட்டுபவர். உலகோரைப் பேய் பிடித்தால்,     காளியின் பிடாரப் பேய்கள் பிடித்த பேயைத் தீர்த்து விடுவர்.

        “எந்திரத்தாற் குளிகை புனைந்து
            யாமளத்தில் எடுத்துரைக்கும்
        மந்திரத்தால் தந்திரத்தால்
            வாராமல் காப்பர்களே.                    

(157)

        “தாருகனார் உடல்உகு செந்
            தடங்குருதிக் கடல் வழங்கி,
        ஓர்உகமோ இரண்டுகமோ
            உண்ட உண ராமையினால்.             
  

(158)

        “வந்தாண்மை பல பேசும்
            மா மயிடன் குறையுடலம்
        தந்தாளும், அவனுடைய
            தலைஎமக்குத் தந்திலளே!                     

(159)

        “எங்கள்அத்தாய், களம் குறுகி
            இமையவரோடு அவுணர் பொரும்
        வெங்களத்திற் குளித்த அன்றும்
            விடாய்தீரப் பெற்றி லமே!               
       

(160)

        “இரும்புஅசிக்கும் பசிபடைத்தோம்.
            எம்மையெலாம் இப்படியே,
        பெரும் பசிக்கு விருந்தாக்கி
            இருந்தாய்க்குஎன் பிழைத்தனமே!”              

(161)

    ‘இரும்பு அசிக்கும் பசி’, இரும்பை உண்டு சரிக்கும் பசி, ‘என் பிழைத்தனம்’: என்ன பிழை செய்தோம்.