பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

28

9

9. காளிக்குக் கூளி கூறியது

        என்று அலகை இவை கூற இது பேய் என்று
            அறிந்ததெனா முது பேய் ஒன்று,
        “வென்றிலகு திரிசூலி! விண்ணப்பம்
            இது கேட்க வேண்டும்” என்றே,                 
 

(162)

        “யாம்பேய்கள்; பசித்தனம் என்று இயம்புவதென்?
            எம்அளவன்று எண்ணில் விண்ணோர்,
        தாம் பேய்கள் எனத்திரிவர் - தம்பதியும்
            இழந்து வெறுந் தரணி மேலே             
    

    (163)

        “திருஇழந்து, திறல்இழந்து, திசைகாக்கும்
            தொழில் இழந்து, தெய்வச் சோதி
        உருஇழந்து திரிகின்றார் - இறவாத
            உயிர் சுமந்த உடலம் கொண்டே.                 

    (164)

    அமரர் இறவாமை பெற்றதால் உயிர் இழவாது உயிர் சுமந்த உடல் கொண்டு திரிகிறார்கள்.

        “அந்தணர்ஆ குதிமறந்தார்; அருமறையும்
            மறந்தனர்; பே ரறமும் சால
        நொந்தது; மா நிலமடந்தை கிடந்தநெடுந்
            தலையரவும் நுடங்க மன்னோ!                

    (165)

        “முத்தேவர் தொழிலான முதல் மூன்றும்
            செயலின்றி, ‘முதல் ஆர்?’ என்றால்,
        எத்தேவர் எம்மனிதர் உளர்ஆவர்?
            உளர் ஆனால் இருப்ப தெங்கே?                

    (166)

        “பார்அவுணர், விசும்புஅவுணர், பசும்பொன்நெடு
            வரைஅவுணர், பார்க்கில் எங்கும்
        பேர்அவுணர் எனும்பெயரே! பிறிதோருபேர்
            இலை” என்று பேசக் கேட்டே,                

(167)

        “ஆரண நாயகி, ஏழுல கானவை
            தானவரால் விளியும்
        காரண மாயது, வானவர் தானவர்
            கட்டுரை செய்” கெனவே,
                    

(168)

    வானவருக்கு இத்திறல் அழிவு எக்காரணத்தால் நிகழ்ந்தது? ஏழுலகும் தானவரால் அழியும் காரணம் என்ன? கூறுக.