பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

29

        மீள அணங்கை வணங்கி எழுந்து,
            விளம்பலுறா வெருவா,
        “வாள்அவு ணன்தனை யேஅரு காக
            அழைத்துஇது கேள்” எனவே,           
     

(169)

        திரு நகை வந்தது; நயன நெடுங்கனல்
            சிந்த நிவந்தது அவள்
        அருகுற நின்றுஅனை அடியில் விழுந்தது,
            அயல்என் விளம்புவதே?                    

(170)

        “அரணிய நெஞ்சினன்; அழல்புரை வெஞ்சினன்;
            அசுரன்; அவன் பெயர் தான்
        இரணியன் என்பது; இவ் எழுபுவ னங்களும்
            இடருற வந்தவனே.                         

(171)

        “பதியொரு வன்புணர் பருவ மடந்தையர்
            இருவர் பயந்தவரில்,
        திதியென நின்றவள்; அசுரர் குலம்தொழு
            தெரிவை பயந்தவளே.                     

(172)

    ‘பதி’: குலபதி கச்யபன், அவன் மனைவியர் திதியும் அதிதியும்.

        “அவன்வர மும்பெரு வலியும் வரம்பில
            அளவில் அறிந்தன கேள்!
        சிவன் அவன் நெஞ்சினும் நியதம் அவன்பெயர்
            செப்பும்; இனிச் செயலே!                    

(173)

        “தரணியின் மேல்உயி ருடைய சராசர
            சகல சமூகமுமே,
        “இரணிய னேநம! இரணிய னேநம!”
            என்றுஇது பேசுவதே!                       

(174)

        “காலைப டான், இருள் மாலைப டான்; வரு
            காலன்வி டாதுஉயிர் சூழ்
        வேலைபடான்; எனை ஆயுதம் மேவினும்
            மேனி படான் அவனே.                    

(175)

    ‘வேலை படான்’: இயமனுடைய வேலினால் அழியான், ‘ஐ’ உருபு மயக்கம். மேனி படான்’ உடலில் படாது; ஏழாம் வேற்றுமைத் தொகை. இரணியன் வதைப் படலம் 17.