New Page 1
“பேடு, மடந்தை, பெருந்திறல் ஆருயிர்
பெற்றவை, இல்லவை என்று
ஊடு புறம்பிலும் உம்பெரா டிம்பரில்
ஊறு படான் அவனே.
(176)
‘ஊடு புறம்பு’: உள்ளும் புறமும் இரணியன் வதைப்படலம்
14, 17.
“வானவர் மாதவர் மானிட ரால்வரும்
மாரணம், மோகனம் என்று
ஆனவை யாவையும் நோவன செய்யினும்,
ஆவிவி டான் அவனே.
(177)
“இந்திர னாம்ஒரு கால்; ஒரு
கால்வெயில்
இரவியு மாம்; இரவில்
சந்திர னாம்ஒரு கால்; ஒரு
கால்உயர்
தனபதி யாம் அவனே.
(178)
“அஞ்சுயர் பூதமு மாம்ஒரு
கால்; ஒரு
கால்அலை யாழியுமாம்;
மஞ்சுயர் மாமழை யாம்ஒரு
கால்; ஒரு
வான்நதி
யாய்வருமே.
(179)
“எட்டு வரைக்குல மாம்ஒரு
கால்; ஒரு
கால் உயர் எண்திசையிற்
கட்டு மதக்கரி யாம்; ஒரு
கால் ஒரு
கட்செவி யாம் அவனே.
(180)
178-180 அனைவர் தொழிலையும் அவன் செய்வான்.
“பங்கயம் ஏறி யிருந்துஉயிர் கோடி
படைத்து, அயி ராவதமாம்
வெங்கயம் ஏறி மகிழ்ந்துஅம
ராவதி
வீதி உலா
வருமே.
(181)
“வெள்ளி நெடுங்கிரி மேல்விளை
யாடி,
விடாத விடாய்கெட மால்
பள்ளி கொளும் கடல் ஓதமெலாம்ஒரு
பாணியின் மேற்கொளுமே.
(182)
“மந்தரம் நின்றது சென்றுஇடறா,
‘இகல்
வானவர் தானவர் பண்டு
இந்த விலங்கல் உரங்கொல்
வருந்தி
எடுத்த’ தெனா நகுமே.
(183)
மந்தர
மலையைக் காலால் இடறி, ‘இதுவோ வானவரும் தானவரும் பாற்கடல் கடைவதற்கு வருந்தி எடுத்த உறுதியான
மலை!’ என நகைப்பான். இரணியன் வதைப் படலம்-11
|