New Page 1
“ஆழி உவர்ப்புனல் என்றுஅணுகான்;நல்
ஆழி படிந்தறி யான்.
வாழி பெரும்புற மாகட லூடுஅவன்
மஞ்சனம் ஆடுவதே.
(184)
இரணியன் வதைப் படலம்-4.
“மாடக பாடவி சால மடைப்பளி
மாநதி வாழ்பதியே.
ஆடக மேருசி லாதல மேஅவன்
ஆரமு தூண்இடமே.
(185)
மாநதி வாழ்பதி: பெரிய ஆறுகள் வாழும் இடம், இமயம்.
இமயம் அட்டில் வீடு; மேரு உண்ணும் பலகை.
“நண்ணி உடன்புணர் போகமடந்தையரே;
நாக மடந்தையரே;
விண்ணில் அரம்பையர் எண்ணில்
வரம்பிலர்
வேள மடந்தையரே.
(186)
‘வேள மடந்தையர்’: பகைப் புலத்துச் சிறைபிடிக்கப்பட்ட
பெண்கள்; கலிங்கத்துப்பரணி 40-ல் திரு. ரா. ராகவ ஐயங்கார் குறிப்பு.
“வென்றி தொடர்ந்தெழு தானவன் வாழ்பதி
வேறுள தாயினும், முன்
தொன்று தொடங்கி வரும்பதி
யின்பெயர்
சோணித
மாபுரமே.
(187)
“பொன்நகரோ! அள
காபுரியோ! புகல்
நாகர் புகும் பிலமோ!
அந்நக ரோடுஎதிர் போதும்
எனத் தரம்
ஆவது கண்டிலமே.
(188)
“ஆயிரம் ஆயிரம் ஓசனை வானம்
ஓர்
ஆறொடு நூறு அகலம்
போயபின் வானவ ரானவர் தேடிய
தொல்புகழ்
புக்கதுவே.
(189)
வானவர் தேடிவைத்த புகழ் ஆயிர யோசனை நீளமும் நூறு யோசனை
அகலமும் உள்ள வான் நதி ( கங்கை )யோடு போயிற்று.
மேலொரு வெற்றி விளம்புவ தென் சில?
வெஞ்சின வஞ்சகன் ஊர்,
நாலொரு பத்துடன் ஒன்பது செந்தழல்
நல் லரண் ஆகியதே.
(190)
அவ் ஊருக்கு அரண் ஆவன 49 செந்தழல்கள். திருவாய்மொழி
3. 10-4-ல் ‘அங்கி’ என்ற சொல்லுக்குப் பொருள் கூறும்போது, உரையாசிரியர் 49 தழல்களைக்
குறிப்பிடுகிறார்.
|