New Page 1
“பெண்ணில் அருங்கல மே! அவன் ஏவு
பெரும்படை யின் தொகைதான்,
எண்ணில் வரம்பில, தானையை
யானையை
எண்ணில் வலம்புரியே.
(191)
‘வலம்புரி’:
சங்கம், நூறாயிரம் கோடி.
“அற்புத மெய்த்தொழில் ஆரமுதே! அணி
தேர்நிரை அற்புதமே.
நற்பது மத்தளம் ஏய்விழி
யாய்! பரி
நற்பது மத்தளவே.
(192)
‘பதுமம்’: நூறு கோடி. ‘அத்புதம்’ பத்து கோடி. வால்மீகி
ராமாயணம் கிட்கிந்தா காண்டம் 38-ம் சருக்கத்தில் இவ்எண்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
“வாளவு ணற்கிறை தானை மலைத்துஎதிர்
வானவ ரைப்பொ ருவார்,
மீளஉணர்த்துவது ஆயிர கோடி
விகற்ப இகற் படையே.
(193)
“இதுபடை யின்தொகை, இதுமரு
வும்பதி,
இவைஅவுணன் செயல், வேறு
அதுவர மும்பெரு வலியும், அவன்பெரிது
அமரர் பயங்கரனே.
(194)
“பண்டுஅவ னுக்குஅம ராவதிவிட்டு,
அதிர்
பால்அலை வேலைபுகப்
புண்ட ரிகத்துஅய னேமுதல் வானவர்
போயினர்; போயினரே.
(195)
“அம்மனை! முன்சில காலமெல்லாம்
அவர்
ஆருயிர் காத்தனை; அத்
தம்மனை அஞ்சினர்; அவனால்உயிர்
சாலவும் அஞ்சிலரே.”
(196)
வானவர் அத்தம் (பொருள்), மனை (பெண்டிர்) பற்றியே
அஞ்சினர், இறவாமை பெற்றதால் உயிர் பற்றி அஞ்சவில்லை.
“மாய்வகை ஏவிட மாலிசு மாலியர்
வஞ்சனை கண்டறிவேம்,
யாம்மிகு கைதவ மாயவி னோதரை
இப்படிக் கண்டிலமே.”
(197)
மாலி சுமாலியர் பிறப்பு உத்தரகாண்டம் 5-6-ல் கூறப்பட்டுள்ளது.
‘மாய் வகை ஏவிட’: கொல்ல அம்பு துரக்க.
|