என்றுஇன சொல்லி இறைஞ்சிய பேயை
இருந்தன பேய் “அடையக்,
கொன்றனை! கொன்றனை! வந்தனன்; வந்தனன்”
என்று குலைந்தனவே.
(198)
வாயும் உலர்ந்தன; நெஞ்சும் உலர்ந்தன;
வஞ்சனை அஞ்சுதலால்,
ஓயும் உடம்பில் உயிர்ப்பொறை சால
ஒடுங்கி நடுங்கினவே.
(199)
‘ஓயும் உடம்பில் உயிர்ப் பொறை: ஒடுங்கும்
உடலில் உயிரைச் சுமப்பது.