பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

34

10

10. கூளிக்குக் காளி கூறியது

        அவ்வயின் அவ்வையும், “அஞ்சலிர்! அஞ்சலிர்!”
            என்றுஅல கைக்குஅருளிச்
        செவ்வையில் நெஞ்சன் இயற்றிய தீமை
            தெளிந்தமை செப்பிடவே,                     

        (200)

        “அம்பு ராசியில் விரும்பிஇன்துயில்
            அனந்த போகசய னத்தின்மேவு
        எம்பி ரான்,அமரர் தம்பிரான்அவன்
            எழுந்தி ராமைஇவை வந்தவே.                

(201)

        “அடைய வந்துஎவரும் அடிமைஎன்றுஉணர்
            அமர ரும்தொழுது பரவுதாள்
        உடைய செங்கமலை முலைபுணர்ந்தவன்
            உணர்ந்தி லாமைஇவை வந்தவே.             
  

(202)

        “வான மாமுகடு தோய மாகடல்
            வரம்பிலே பகைநி ரம்புநாள்,
        மீனம் ஆகிவிளை யாடு மாலவன்
            வெளிப்ப டாமைஇவை வந்தவே.                

(203)

        “குன்றுஅ ராவொடு சுழன்று வாரிதி
            குழம்ப ஆரமுது எழும்புநாள்,
        அன்றுஒர் ஆமைவடி வான நாயகன்
            அறிந்தி லாமைஇவை வந்தவே.                

(204)

        “நீழல் ஆழிவெயில் சூழ, ஆழிஒரு
            நீல மால்வரை நிமிர்ந்தெனக்
        கேழல் ஆயபெரு மாய னார்உலகு
            கேள்வி யின்மைஇவை வந்தவே.                

(205)

    ‘நீழல் ஆழி வெயில் சூழ, ஆழி ஒரு நீல மால்வரை: ஒளி பொருந்திய சக்கரப் படையின் வெயில் பரவும்படித் திருப்பாற்கடலில் ஒரு நீலமலை.

        “அன்று கேழல்உரு வான மால், செருவில்
            ஆட கக்கண்அசு ரேசனைக்
        கொன்ற வன்குருதி வேலையால், இறை
            குளிர்ந்தது இக்கொடிய பாலையே.               

(206)

    ‘ஆடகக்கண் அசுரேசன்’: பொற்கண்ணன் ( இரணியாட்சன் ) என்ற அசுரர் தலைவன். இரணியன் உடன் பிறந்தான்.