New Page 1
“ஓர்எயிற் றில்ஒரு கூறுபட்ட உல
கங்கள் யாவையும் ஒதுங்க,
ஓர்
கூர்எயிற் றில்இரு கூறுபட்டுளது
கொடியபே ரவுணன் உடலமே.
(207)
“முரண்இ யன்றஅவன் உயிர்சு
வர்ந்தருளும்
முளரி யங்கண்முகில் வண்ணனே
இரணியன்தன் உயிர்கவரும் என்பதெனது
எண்ணில்வ ந்ததுஇது திண்ணமே.
(208)
“நஞ்சு போலும்நய னத்தவன்தவம்
உஞற்ற நான்முகன் அளித்தநாள்
அஞ்சு கோடிஉள வஞ்சன் எஞ்சஇனி
அஞ்சுகோடு அயலுள் நிற்பதே.
(209)
இரணியனுக்கு ஆயுள் இன்னம் ஐந்து கோடி உள; எனினும், திருமால்
பக்கல் ஐந்து ஆயுதங்களும் இருக்க இவ் ஆயுள் நிற்குமா?
“தூய வானவர் தொலைந்து தோள்வலி
சுருங்க வென்று, இடை
நெருக்கும்அத்
தீய வாள்அவுணர் மாய
வாழ்வொடு
செருக்கும் நாள்அவை
சுருக்கமே.
(210)
“ஆன வாறுதெளி விப்ப தாக,
அடல்
ஆழியான் மருவும் ஆழியில்
போன வானவர் புகுந்தபோது,
அசுரர்
புங்க வன்தன்உயிர் போவதே.”
(211)
“என்ன அன்னைஇவை சொன்ன எல்லையில்
எழுந்து இறைஞ்சி,உல கெங்கணும்
சொன்ன சொன்னதுறை கற்று வல்லதொரு
சோதி டத்துஅலகை
சொல்லுமே:
(212)
கனவு உரைத்தல்
“பொற்பார்மதில் அணிசோணித
புரமாகிய நகர்வாய்
உற்பாதம்அவ் அசுராதிபன்
உயிர்கொள்வன உளவே.
(213)
“மொழியின்திரு வருளே! இனி
முடிவாவது கொடியோன்
அழியும்படி வருகின்றன,
அடியேனது குறியே.
|