பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

36

New Page 1

        “பகல்வானிடை உருமேறொடு
            பலதாரகை விழுமே,
        இகல்வானவில் பலநாளிடை
            இருள்மாலையில் எழுமே.                     

(215)

        “ஓதப்புனல் பருகும்புயல்
            உதிரப் புனல் உகுமே, 
        மேதிக்கெழு கதிரோன்எதிர்
            வெயில் மண்டலம் இடுமே.                 

    (216)

        “சுழல்சூறைகள் எழுமே, பல
            துகிலின் கொடி விழுமே,
        நிழல் சீறுவ களியானைகள்
            நின்றே துயில் பெறுமே.                    

(217)

        “கூகைக் குலம் ஒரு கோடிகள்
            குழறும் குரல் கொடிதே,
        தோகைக் குலம் அனையார் குழல்
            சுறு நாறுவ பலவே.                         

(218)

    ‘சுறுநாறுதல்’: மயிர் எரியும்போது எழும் நாற்றம். கம்பன் இராவணன் மந்திரம் 13, தக்க யாகப் பரணி 184.

        “மின்நேர் தரும் இடையாய்இவை
            விளைகின்றதொர் அளவோ?
        சொன்னேன்இடை சில; வேறுள
            சொல்லாதன பலவே.                     

(219)

        “பண்டேஇவை பலதீயவை
            பயில்கின்றன, ஒழியக்
        கண்டேன் இனி உலகத்தவர்
            காணாததொர் கனவே.                     

(220)

        “பிறைமருவும் இலங்கெயிற்றுப் பிலங்கொள் பேழ்வாய்ப்
            பெரியஉடல், எரிஅவிர்கண், பிறழா வென்றிக்
        கறைமருவும் விடமிடற்றுக் கனக மேனிக்
            கன்றியவெஞ் சினநாகம் ஒன்று கண்டேன்.           

(221)

    ‘கறை மருவும் விட மிடற்றுக் கனகமேனி: நீல நிறவிடம் கொண்ட கழுத்துடைய பொன்மேனியன்.