New Page 1
“ஓடும்மழை முகில்கணங்கள் பிணங்க, மேல்போய்
ஒளிகதிரோன் எழுபரித்தே
ருடனே கூடி,
ஆடுகொடி நெடும்புரிசை மாட
வீதி
அணிஅரங்கம் எனைஊழி
வாழி!” என்றே.
(8)
ஓடுகின்ற கருமேகக் கூட்டங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மேல்
எழுகின்றன; கதிரவன் மறைகிறான்; அவனுடைய தேருடன் மதில்மேல் ஆடும் கொடிகள் கூடுகின்றன. ‘எனை
ஊழி’: பல யுகங்கள், ( திருவிருத்தம் ).
கதைப் படை
ஆற்றாத அமரர்திரண்டு
‘அபயம்’ என்ன
அஞ்சாத வகைஅருளி, வெஞ்ச
மத்தால்
போற்றாதார் மணிமகுட பந்தி
சிந்தப்
பொருதண்டின் பெருவலியைப்
போற்றல் செய்வாம்:
(9)
* *
* *
* * * *
(10)
அரவின் அமளி
வருண மணிநிரைகள் இலக,
உலகடைய
மருவு பொறைமகுட சுடிகை
யால்
அருண கிரணரவி தருண வெயில்உமிழும்
அரவின் ஒளிஅமளி
பரவுவாம்:
(11)
‘வருணமணி’: பலநிற மணிகள். ‘உலகு அடைய மருவு பொறை மகுட
சுடிகை’: உலகு முழுவதும் பொருந்துகின்ற பாரத்தை உடைய தலை முடிகள்.
மழைபெய் முகிலு மணிமலையும் மறிகடலும்
வனச வனமும்என வடிவெலாம்
அழகு பொழியநதி நடுவு
கமலைபுணர்
அமலர்
துயில்மருவி யருளவே.
(12)
பறவையரசன்
அவனி முழுதும்நிலை குலையும்
எனஅருளி,
அகல மிகுககன வெளியில்ஓர்
பவன குலகிரிகள் அசைய விசையில்வரு
பறவை யரசன்அடி
பரவுவாம்:
(13)
இறுகு கனைகழல்கள் அதிரஅதிர,
விழி
யிடையின் வடவையெரி
சொரிய, நேர்
மறுகில் வருபெரிய கனக நெடுவரையை
வகிரும் ஒருவன்உகிர் வளரவே.
(14)
‘கனக நெடுவரை’: இரணியன் ( உருவகம் )
|