New Page 1
‘பாழ்கிடக்கும் பெருவயிற்றின்
பசி தீரும் படி, நமக்குக்
கூழ்கிடைக்கும்; கிடைக்கும்’
எனச்
சி்லகொடுநாக் கெறிந்தனவே!
(230)
‘தாய்உரைக்கும் சரதமொழி
தப்பாது; தப்பினும்இப்
பேய்உரைக்கும் நிமித்தகதி
பிழையாது’ என்று இருந்தனவே!
(231)
ஆக போகமுற்று அதுநினைத்தபேய்
அவையிருக்க,ஓர் அலகைவல்விரைந்து
ஓகை ஓகைபே ரோகை உண்டென
ஓடிவந்துமோ டியைவணங்கவே,
(232)
தோகை, “ஓகைஎன் சொல்லு” கென்ன,
“மால்
துத்தி நாகணைத் துயில்
உணர்ந்தெழக்
காக நீழல்சூழ் சமர பூமியில்
கண் து யின்றனன் கனகன்”
என்றதே.
(233)
என்ற வாசகம் செவிபு காதமுன்
இலகு வாள்எயிற்று அலகை
யின்குழாம்,
ஒன்றின் மேல்விழுந்து ஒன்றுஇ
றைத்தபேர்-
ஒலியை ஒக்குமே ஊழி ஆழியே.
(234)
மிசையெழுந்தன; சில விழுந்தன;
விழிசு ழன்றனவே;
திசை பரந்தன; சில திரிந்தன;
செயல்அ றிந்திலவே.
(235)
சில கை கொட்டின; சில சிரித்தன;
சில க ளித்தனவே;
அலகை இப்படி அடைய மொய்த்தன
அலவலைத் தனவே
(236)
குமரி வெட்டிய மயிடன் ஒப்புமை
கொடு குளித்தனவே.
அமரி கைப்படும் அசுரனைச்
சில
அவிநயத் தனவே.
(237)
‘அவி நயத்தன’: அபிநயம் செய்தன.
|