பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

39

New Page 1

        சொன்னபேயை எடுத்த தோளொடு
            துள்ளி யாடினவே;
        முன்ன மேகணி சொன்ன வாயிடை
            முத்த முண்டனவே.                        

(238)

        கண்டகன் ஆவிநலம்
            கழியும் எனக், கணியார்
        கண்ட க னாவின்நலம்
            கண்டு களித்தனவே.                        

(239)