11
11. திரு அவதாரம்
அவ்வகைய பேருவகை கண்டருள்
அணங்கும்அள வேநகை
அரும்ப, “இனிநீர்
இவ்வகையில் யாவரும் இறைப்பொழுது
அடக்கமொடு இருக்”கென
இருத்தபொழுதே,
(240)
வந்தமுது பேயினை அழைத்தருளி,
“வாள்அவுண னாருடன், வரங்கள்அடையச்
சிந்தவிளை யாடிஅமர் செய்ததிரு
மால்பெரிய சேவகம்
விளம்பு”கெனவே,
(241)
“வல்லதுஉரை செய்வன்அடி யேன்”என
மலர்ப்பதம் வணங்கிவழி
பட்டு, “ஒருவரால்
வெல்லமுடி யாதன முடிந்தபடி
கேள்” என வியப்புற
விளம்பும்அதுவே:
(242)
“தோளுடைய வாள்வலியில் வானவர்கள்
ஆனவர் தொலைந்தபடி
சொல்லும்அளவோ.
ஆளுடைய நாயகி,இ னாதஅசு
ராதிபனை ஆதியில் அறிந்தருளுமால்
(243)
‘இனாத’: இன்னாத, கொடிய
புண்டரிக நாபிமுகில் உண்டபதி
னாலுபுவ னம்பொதுஅழித்தஅளவோ,
அண்டம்இது போல்வன அனந்தசத
கோடிகள் இறந்ததுஅவன்
ஆணையளவே,
(244)
‘பொது அழித்த’: பொதுமை இன்றித் தனி உரிமை ஆக்கிய,
‘புண்டரிக நாபி முகில்’: தாமரை உந்தி உடைய மேகம் போன்ற திருமால்.
அத்தகையன் ஆகிஅம ராவதி
யிருந்துமுழு தாளும்அசு ரேசன்ஒருநாள்,
இத்தகைய பாரில்அணி சோணித
புரம்புக எழுச்சியை
விளம்பிஎழவே,
(245)
இனிக் கூற உள்ள நிகழ்ச்சிக்கு முன்பே இரணியன் அமராவதியை
வென்றிருந்தான்.
வந்துஇரு மருங்கினும் நெருங்கினர்
வரம்பிலர் அரம்பையர்
வணங்கிவரவே,
கந்திருவர் கிம்புருடர்
விஞ்சைய
ருடன்கருடர் என்றுஇவர்
கரம்குவியவே.
(246)
|