ச
சாமரம் எடுத்துஅசைய வீசிய
கரத்தினொடு சாரணர்
இயக்கர்வரவே,
காமரு மதிக்கவிகை காண்வர
உயர்த்ததிசை காவலர்
பிடித்துவரவே,
(247)
வானவர் தமக்குமுத லானவர்
வடித்தசுடர் வாள்பல பிடித்துவரவே,
ஏனையர் பிலத்துஉரக ராசரொடு
அரக்கர்ஏறி வேல்கொடு
நெருக்கிவரவே,
(248)
ஆனையும் அடல்பரியும் ஆயும்இர
தத்தொகையும் ஆனதிசை முட்டி,
மிசைபோய்,
வானையும் நெருக்குதலில்
வாளகிரி
அப்புறமும் வாள்அவுணர்
சுற்றிவரவே,
(249)
‘வாள கிரி’: சக்கரவாள கிரி.
தூயபுன லில்கனலில் வாசியற
விட்டதொரு தூசியின் முகத்தின்எதிரே,
வாயுவில் இரட்டிவிசை பாயுமனம்
ஒப்பதொரு மாவின்மிசை
புக்கபொழுதே,
(250)
மேருகிரி யில்,பொலியும் வேலைவெளி
யில்,துளிகொள் மேகபட
லத்தில்,ஒளிசேர்
தாரகை நிலத்தில்,எழு தாளகதி
யில்,குதிகொள் தாரையின்
மிதித்துவருமே.
(251)
இன்றுதலை வன்புரவி ஒன்று,பல
என்றுஉரை மயங்க,உல கெங்கும்நொடியிற்
சென்றுவரு வன்,பவுரி கொண்டுஅவுணர்
நின்றுலவு செண்டுவெளி யண்டவெளியே.
(252)
அந்தரம் அடங்கலும் நடந்துவட
விந்தமலை யின்தலையின்
வந்தடிஇடா,
இந்தஉல கம்தொழுது இசைந்துநில
வின்கதிர் இழிந்ததென
வந்திழியவே,
(253)
ஏறிய துரங்கநிரை ஆழிகள்
அடங்கலும்வி லாழியில்
நிரம்ப,மிசைபோய்
ஏறிவரு பைம்புரவி ஏழுபுவி
யும்பவனி யாம்என இசைந்துவருமே.
(254)
|