பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

42

        வாளிவரு பைம்புரவி ஏறிவரு
            கின்றசெயல், மாகவெளி எங்கும்நிறையத்
        தூளிபட லங்கள்பல தூதுசெல,
            வந்துஎதிர்கொள் சோணித புரம்குறுகவே,        

(255)

    தூளி முன் செல்வது தூது செல்வது போன்றது.

        தோரண நெருங்குமணி மாளிகை
            நெடுந்தெருவு தூண்உறை பொதிந்து, கனபொற்
        பூரண குடங்கள்,பல பாலிகை
            அணிந்துஅருகு பூமழை பொழிந்துவரவே,         

(256)

        மேனிவியர் கண்டுகடி தோடிஎதிர்
            கொண்டுஅசைய வீசுகுளிர் தென்றல்வரவே,
        வானில்எழு கொண்டல்பொழி சீகரம்
            முகந்தஇள வாடையும் மருங்குவரவே,               

(257)

    ‘முகந்த’: பெயரெச்சம்

        மாபுர சனங்கள்பலர் ‘வாழி’யென,
            வந்துவய மாவின்மிசை நின்று,மதிதோய்
        கோபுர நெடும்புரிசை வாயிலின்
            இழிந்துஅசுரர் கோயில்புகு தும்பொழுதிலே,          

        (258)

        “ஆனைஇர தம்புரவி ஆள்அணி
            அடங்கஇனி துஆறுக, அரம்பையர்மதன்
        சேனையில் இடம்செறிக, தேவரொடும்
            ஐந்தருவு சேரவிடு” கென்றுபுகவே,            

(259)

        சென்ற தாரணி நின்ற பேரணி
            சேர விட்டது பாரெலாம்
        வென்ற தானைய தன்பெ ருந்ததொகை
            வெள்ள மாயிர கோடியே.                    

(260)

        தொட்ட வார்கழல் அசுரர் பூபதி
            சொன்ன போதுஒரு முறையினால்,
        விட்ட தானை யடங்க, மாநகர்
            வெளி கிடந்தது வீதியே,                     

(261)

        செங்கண் மால்இரு பாதமோ! தமிழ்
            செய்த மாமுனி செங்கையோ!
        அங்கண் மால்நகர் அதுகொலோ! முடிவு
            அறிகி லாஅள வுடையதே.                   

(262)

    மூவுலகை ஈரடியால் அளந்ததால் செங்கண்மால் இருபாதமும், கடல் நீரை ஒரு கையில் குடித்ததால் தமிழ் மாமுனி செங்கையும் நகரத்தின் பரப்புக்கு ஒப்பு