பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

44

        வருணன் வந்துஅணி தரள பந்தியின்
            மணி வடம்பல புனையவே,
        அருள் நயந்துஅவன் அருகுவந்தனர்
            அசுரர் மடந்தையர் ஆடவே,                

(271)

        சூழ்இசைக் குரலாதி நாரதர்
            தும்பு ருக்கள்ப யின்றசீர்
        யாழிசைக் குஇசையப் புகுந்து இள
            மென்கை மங்கையர் ஆடவே,                

(272)

        அந்தி மாலையில் வந்தெடுத்த
            அரம்பை மாதர் விளக்குடன்,
        சி்ந்து தாரகை யும்கலந்து உயர்
            சேண்வி சும்பு விளங்கவே,                 

(273)

    அரம்பையர் எடுத்த திரு அந்திக் காப்பும் வீழும் தாரகையும் சேர்ந்து வானை ஒளி செய்தன.

        யாமம் ஒன்று கழிந்த எல்லையில்,
            “எம்பி ரான்! இனி எங்கணும்
        சேமம்” என்று உயர் கோயில் காவலர்
            சென்று இறைஞ்சினர் நிற்கவே,                

(274)

        தோகை மா மயில் அன்ன மங்கை
            சுகந்த மாலை புகுந்திடப்,
        ‘போக வா னவர்!’ என்று தான்ஒரு
            பொங்கு பூவணை தங்கவே,                

(275)

        மைகலந்தன ஓதி, சோதி
            வடம்கொள் கொங்கையும் மார்பமும்
        கைகலந்தன நெஞ்சு போல்இரு
            கண்க லந்தன தம்மிலே.                    

(276)

        ஆர மாமுலை குமுத வாய்இதழ்
            அமுத பானமும் அளவிலா
        வீர பானமும் மகிழ்தலால், மிக
            மெய்ம்ம யங்கி முயங்கவே,                 

(277)

    ‘இதழ் அமுத பானம்’: ‘வால் எயிறு ஊறிய நீர்’ பெண்கள் கீழ் உதட்டில் அமுதம் இருக்கிறது என்பர்.

        மால் வளைந்துஎழு காதல் கூர
            மனங்கலந்த அனங்கன்வில்
        கால்வளைந்தது, மேல்விளைந்தது
            கட்டுரைக்கு மதுஅல்லவே!                    

(278)