பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

5

New Page 1

        குடர்கோலிய தொடைமாலைகள்
            புனைகோ ளரிபிரியா
        வடகோபுரம் மதிதோய்வட
            மலைபோல் நிலைபெறவே.                    

(20)

    ‘வடகோபுரம்’: திருவரங்கத்தில் பெருமாள் சந்நிதிக்கு வடபால் கோபுர நடுவில் சிங்கப்பிரான் எழுந்தருளி இருக்கிறார். 689-ம் தாழிசையிலும் இது கூறப்படும். ‘வடமலை’: மேரு.

வாழ்த்து 

        திருமகள், விரும்பியுறை திருமார்பு வாழியே!
            செகமுழு தரும்பும்ஒரு திருநாபி வாழியே!
        அருமறை யினும்பழைய திருமேனி வாழியே!
            அழகிய அரங்கர்கழல் எனைஊழி வாழியே!        

        (21)

        பொருதுஅடு முதலை வலியால் நோவுகூர்
            புகர்முக களபம், ஒருகால் ‘மூலமே
        வரு’கெனும் அளவில் வருவான் வாழியே!
            வடிவழ குடைய பெருமான் வாழியே!
           

        (22)

            விளைந்த போரில்வி டாதுமேல்
        வெகுண்ட தானவன் மார்பெலாம்
            அளைந்த கூர்உகிர் வாழியே!
        அரங்க னார்கழல் வாழியே!                

(23)

        வளர்ந்த தோள்கள் வாழியே!
            வரம்பில் ஆழி ஏழுபார்
        அளந்த தாள்கள் வாழியே!
            அரங்கர் வாழி வாழியே!                    

(24)

        வாழிசட கோபன்! வாழிபர காலன்!
            வாழிதமிழ் வேத வாய்மைநூல்!
        வாழிஎதி ராசன்! வாழிமறை வாணர்!
            வாழிஎனை ஊழி! வாழியே!                

(25)

        வேலைஅலை மீது சோரிஅலை ஏற
            வேடர்படை சாடி மீளும்நாள்,
        சோலைமலை காவல் பேணிமுனிவு ஆறு
            தூயமுனி வாழி! வாழியே!                    

(26)

        ‘தூய முனி’: அழகர் கோயிலில் உள்ள 18-ம் படிக் கருப்பன்.