பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

6

ஆத

        ஆதிமறை நூலும் மார்பில்அணி நூலும்
            ஆனமனு நூலும் ஊழிநாள்
        மேதினியில் வாழ, வேதம்முடி சூடும்
            வீரமுனி வாழி! வாழியே!                    

(27)

    ‘வீரமுனி’: நாதமுனி, வீர நாராயணபுரத்தவர்.

        மாகணையை வீசி, ஆளைவிழ ஓடி
            வாளைகுதி பாயும் வாவிசூழ்,
        நாகணையின் மேவு, தானகுண சீல
            னான தவ ராசன் வாழியே!      
         

(28)

    ‘தவராசன்’, இராமாநுசன். ஆசாரியர்களுக்குள் இவர் ஒருவருக்கே அரசுப்பட்டம் உண்டு. ‘பரம ஞானக் கோமான்’ (ஆண்டாள் பிள்ளைத்தமிழ்), ‘செங்கோலே உலகனைத்தும் செல்லக் கையில் முக்கோலே தரித்த யதிராசன்’ (சீரங்க நாயகர் ஊசல்), ‘இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமாநுசன்’ (இராமாநுச நூற்றந்தாதி), எனப் பல்லோரால் புகழப் பட்டவர்.  ‘மாகணையை வீசிய ஆளைவிழ ஓடி வாளை குதிபாயும்’: வாளை மீன் அருகில் உள்ள கோட்டைச் சுவரில் பாய்ந்து அங்குள்ள பெரும் அம்பு வீசிய வீரரை வீழ்த்தும்.

        முறைமுறை எழிலி பொழிகவே!
            முழுதுயிர்  நிலைமை பெறுகவே!
        நிறைபுனல் பெருகி வருகவே!
            நிலமகள் உணவு தருகவே!                    

        (29)

        கதிர்வெயில் இரவி மரபில் வாழ்
            கழல்புனை வளவன் நிழல்குலாம்
        மதிபுரை கவிகை நிலவினால்,
            மலர்தலை யுலகு வளர்கவே!                   

(30)

    “வளவன் நிழலில் உலகு வளர்க” என்பதால் இந்நூலாசிரியர் சோணாட்டார் எனலாம்.