பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

70

        மிக்கவரைப் பிடித்து, அடியில் வீழ்ந்தவரை
            மிதித்து, எழுந்து வெருவி ஓடிப்
        புக்கவரைக் கிழித்து, அந்தப் புரத்தவரை
            யமபுரத்துப் போக விட்டே.                 

(454)

        பந்தியோடு பரிபுரளப், பாயாத
            நிரைசரியப் பனைக்கை வன்தாள்
        தந்தியோடு பிடிமடியத் தாளிணையின்
            மிதித்து உழக்கித் தரைப்படுத்தே,
                   

(455)

    ‘பாயாத நிரை’: ஓடாத தேர்கள்

        பாறினொடு கழுகின்உடல் பசிதீரும்
            படிஇரத்தம் பரப்பி, யாக்கை
        வேறுபடும் உயிர்அடைய வெங்கூற்றம்
            இனிதருந்த விருந்து செய்தே,
                

(456)

        மாநகரம் குலைந்துஒழிய, மறலிநகர்
            மனம்களிப்ப, வளர்ந்து வானில்
        போனகரம் திசைதடவப் புயல்முகடு
            முடிவருடப் புறப்பட்டு ஆர்த்தே, 
              

(457)

        பார்ஒருகால் இடைகிழியப், பலபலகால்
            வெற்புஅதிரப் பகுவாய்ச் சிங்கம்
        ஓர்ஒருகால் நகுவதுகேட்டு, உகுவதல்லால்
            உயிருடையார்க்கு உய்ய லாமே? 
               

(458)

        கூரமர்வேல் படைஅவுணன் கோளரிமேல்
            கொதித்துஇருகண் குருதி கால,
        ஆரமர்வேட்டு எழும்அளவில், அம்பரத்துச்
            சம்பரன்வந்து ஆர்த்து எழுந்தே,    
           

(459)

        ‘நிற்கநிற்க என்இது, எம்பிரான்’ எனவும்,
            ‘நீவெகுண் டெழுகை நிற்’கென
        வற்கவற்க அவுணர் தானை வேலையொடு
            இழிந்து பார்மிசை வணங்கியே,                 

(460)

        அந்த மான்இடம் உவந்த தேவர்முதல்
            ஆதிவானவர்கள் அஞ்சினர்.
        இந்த மானிட மடங்கல் போலும்இனி
            எம்பிரானுடன் எதிர்ப்பதே!
                    

(461)

    ‘மான் இடம் உவந்த தேவர்’: இடது கையில் மான் ஏந்திய சிவபெருமான்.