New Page 1
“பாரும் நீரும்முத லான பேருடைய
பஞ்சபூதம்உனை அஞ்சினால்
ஆர்உன் நேர்பொருவ தாக வேகமுடன்
அண்ணல்நீஅமர் குறித்ததே!
(462)
“எற்றி நின்கரம் அடித்த தூணிடை
உதித்த கோளரியை, உயிரொடும்
பற்றி வந்தமரர் காண உன்தனடி
பணிவன் இன்றுபகை தணிவனே.
(463)
“ஆயுவைப் பருகும் மீளியைச்
சிலர்
அடர்ப்பரே! அதுகிடக்க,
நேர்
வாயுவைத் துகள் எதிர்க்குமே!
இடை
மடங்கல் வந்துஉனை மலைப்பதே!
(464)
“நீமுனிந் தொழுவது என்கொல்?
எம்பெரும!
நின்று கண்டருள்செய்!”
என்றுசெந்
தீமுனிந் தெழுவ தென்ன, வேகமொடு
சேனைநாதன் எதிர் செல்லவே,
(465)
வந்தகார்அவுணர்சே னை,மாநிலமும்
அந்தரங்களும் மறைத்துஇருண்டு
அந்தகார முடன்ஆல காலம்எழும்
ஆரவாரம் எனல்ஆகியே,
(466)
தேரும் மாவும் மதவாரி யால்அவனி
சேறு செய்துவரு செம்முகக்
காரு மாய்விரவு தானை, மேதினி
கரந்து வான்வெளி பரந்ததே.
(467)
‘செம்முகக்கார்’: சிவந்த படாம் அணிந்ததால் செம்முகமும்,
கரு நிறமும் உள்ள யானை ( ஆகுபெயர் )
குன்று போல்வருவ கொண்டல்போல் அதிர்வ
குன்றுவார் கடலில் ஒன்றவைத்து
ஒன்று போல்சுழல நின்று
சீறுவன
ஓடை யானைசத கோடியே
(468)
கூளி, பேர்அலகை, ஞானி
கோள்உழுவை,
காளை,பாய் குதிரை, யானை,பேர்
ஆளியேறு, அரி, கடா,விடா துடன்
அனந்த கோடியின்
அனந்தமே.
(469)
|