பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

72

        வீசி ஏறுதிரை யாழி ஏழில், உயர்
            வெற்புஒர் ஏழில், விளை முற் படத்
        தூசி ஏறுவன நூறு கோடியுள
            துள்ளு பாய் புரவி வெள்ளமே.
                

(470)

        மோதும் ஆடவரும் மாவும்மா நடவு
            தேரும் மும்மத விலங்கலும்
        பாதியாக ஒருபாதி மேதினி
            பரந்துமேல்எழு பதாதியே. 
                  

(471)

        குன்று கோடிசத கோடி வேலையொடு
            கூடினால் உவமை போதுமோ?
        ஒன்று கோடிபல சென்ற தானமென
            உள்ள தானை பலவெள்ளமே.   
               

(472)

        ஈன் எலாம் அதனைஎண் ணலாம் அளவில்
            எண்ணினால் எழுதல் ஒண்ணுமோ?
        வானெலாம் அதன்வரம் பெலாம் அடைய
            மான வேல் அவுணர் தானையே.   
               

(473)

        வானும் மண்தலமும் எண்தி சாமுகமும்
            மண்டியேற, எழில் ஒண்சுடர்ப்
        பானு மண்டலம் மறைத் தெழுந்தன
            பரந்த தூளிபட லங்களே.
                   

(474)

        வேறு செய்து உலகு கூறி டாதவகை
            விண்ணும் மண்ணும் உற வாக,முன்
        சேறு செய்வன் என வான் நீள்உலகு
            சென்றெ ழும்துகள் செறிந்ததே.
                 

(475)

    ‘தாக்கிய களிறும் தேரும் புரவியும் படைஞர் தாமும், ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகாக்கப் போனான்’ ( கம்பன் )

 

        திண்ப தாதியில் எழுந்த தூளி, திரு
            மேனி மேல் அணுகல் தீதெனா,
        வெண்ப தாகைநிரை, எம்பிரான் அருகு
            வீச மேல் எழுவ போலுமால்.
                 

(476)

        மானிடம் பொலிமடங்கல் மேனியை
            வளைந்த வெம்படை, பரந்தெழும்
        பால்நெடுங் கடலைமற்றை மாகடல்கள்
            பக்கமே வளைவ ஒக்குமே
                    

(477)