பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

73

அந

        அந்த வேலையுள் அடங்கலும் கயல்கள்
            ஆமெனப் பெரிய தோமரம்,
        குந்தம், வேலினம், மழுக் கழுத் திகிரி
            கொண்ட பேயவுணர் மண்டவே.
                   

(478)

        தண்டு, சூலம், எறி பிண்டி, பாலம், உயர்
            சங்கு, பாரவளை, அங்குசம்,
        கொண்டு வீசுவன பாசம், ஒண் பரிசை,
            குந்தம் என்றுஇனைய சிந்தவே.
                

(479)

        முற்கரம், குலிசம் உரிய வாள வுணர்,
            முட்டியிட்டகதை, கரடிகோல்,
        வில்கரத்த சர மாரி என்று இவை
            விசும் பெலாம் மறைய வீசவே,
                 

(480)

        விட்ட ஆயுதம் அனந்த கோடி வெயில்
            வீச வெங்கதிர் கரத்தலால்
        இட்ட காவணம் எனச் செறிந்து, இடையில்
            இம்பர் வாழ் உலகம் வெருளவே,
                

(481)

        துற்ற வெம்படைகள் ஒன்றை ஒன்றுஇடை
            துணிக்க வீழ்குறைகள் ஊழிநாள்
        உற்றெ ழுந்தபெரு மாருதத் திடை
            உதிர்ந்த தாரகைகள் ஒக்கவே,
               

(482)

        பூழி வான வெளி புதைய, வாளவுணர்
            பூசல் வாய் இடை கலக்கவே,
        ஆழி மால் வரை கிளர்ந்த பேரொலி
            அதிர்ந்த பல்லியம் அடக்கவே,    
            

(483)

    எம்பெருமானுடைய வீரச் செயலைக் கூறும் ‘ஆழி எழ’ என்னும் 7,4ம் திருவாய் மொழியைப் பின்பற்றியது,

        வந்தெ திர்ந்துபொரு சம்பரன் படை
            வளைந்து கொண்டபடி கண்டு, தன்
        சிந்தை பொங்கிஅழல் சிந்துகின்றநர
            சிங்கமும் சிறிது சீறியே,                     

(484)

        வருபடை அவுணரை முழுத கப்பட
            வளைவது நினைவுற வளர்தி ருப்புயம்
        இருபுடை யினும், இடை யிடைத ழைத்தன

            இகல்அடு படையன சிலதடக்கையே.    
                                 

 (485)