ப
பருதியின் உருகெழு கிரணம் ஒப்பன;
பலகவடு ஒருகிரி விடுவது
ஒப்பன;
சுருதியின் முதல்விளை
கிளைகள் ஒப்பன;
சுடருற நிமிர்வன படதடக்கையே.
(486)
‘கிளை’: வேதங்களின் சாகைகள்
தரைபொரும் எழுகுல வரையி டத்தன;
தமனிய மலைபொரு பெரு
லவத்தன;
திரைபொரு கனைகட லிடைதிளைப்பன-
திசைபெற விடுவன சிலதடக்கையே.
(487)
நிலமகள் திருநுதல் வியர்
புலர்த்திய
நிறமெழு கிரியன சில திருக்கரம்
மலர்மகள் நகில்புனை குழம்பினால்
வடிவழ குடையன சிலமலர்க்
கையே
(488)
மிடல்கெழு பரசுவும் உழுகலப்பையும்
வியன்மிகு குலிசமும்
விசிறு பட்டமும்
உடல்வகிர் இடுவன; திகிரி
வச்சிரம்
உடையன; இடையன,சிலஉரக்கையே.
(489)
‘உரக்கை’: வலியகை
பரிகமொ டெழுவன; பலகை பற்றின;
பலகொலை அறிவன; படஅடிப்பன;
தெரிகணை தெரிவன; சில வளைப்பன;
செருமுனை புகுவன-சிலதிருக்கையே.
(490)
துளவணி தொடையன; தொடி செறிப்பன;
தொடுகழல் புனைவன; தொழில்புரப்பன;
இளஅணி அடுவன; இகலின் முற்பட
எறிபடை எறிவன-சில திருக்கையே.
(491)
ஒளிநில வுறுவன; உயிர் குடிப்பன;
உயிர்பெரு வரையோடு மயிர்பிளப்பன;
தெளிவினம் அரிஉகிர் வடிவம்ஒப்பன;
திருமனம் உடையன-சில திருக்கையே.
(492)
‘திருமனம்’: கைக்குத் தானே இயங்கும் மனம் உண்டு.
*வெருவரு விழியன; விளி புறப்பட
வெடிபடு நகையொடு வெயில்விழித்தெதிர்
ஒருவன்முன் ஒருதிரு முகம்
வெளிப்பட,
உரமுடை அவுணரை
உறநெருங்கியே,
(493)
*திருக் கரங்களைப் பேசுமிடத்து முறைபிறழ வந்ததது.
|