எர
எரிசினத்தவர் விடுபடைக்கலம்
எரியெழச் சிதறித்
தெரிவரக்கடல் திடர்மடுப்பன-
சிலதிருக் கரமே.
(494)
வெருவி யுற்றவர் உடல்பிடித்த,
அடல்
விரலிடைப் பலரைத்
திருஉகிர்ப் புடை யறஅறைப்
பன-
சில திருக்கரமே.
(495)
தசைஉகைத்துஎழு திருஉகிர்ப்
புரை
யிடை ஒளித்தவரைத்,
திசைபுகப்புக மிசை நெரிப்பன-
சில திருக்கரமே.
(496)
உரும்இடிப் பன; உயிர் குடிப்பன;
உடல்துடித்து விழச்
சிரம் இடிப்பன; கரம் ஒடிப்பன-
சில திருக்கரமே.
(497)
முனைமுகத்தெழு படைஎதிர்ப்பவர்
முடிகளைச் சிதறிச்
சினமிகுத்தொடு செருவிளைப்பன-
சில திருக்கரமே.
(498)
அலர் முடித்தன என, நகைத்தெழும்
அறுகுறைத் தலையில்
சிலர் முடித்தலை திருகி வைப்பன-
சில திருக்கரமே.
(499)
செருவரைக்கண நிரைவிழக்குவை
சிரம்அறுத்து, அகலப்
பருவரைக்கெதிர் எதிர்குவிப்பன-
பல திருக்கரமே.
(500)
உகிர் மடுத்து இடைவளைப்படுத்து,
உயிர்
அறஒழித்து, உடலைப்
பகிர் படுத்து,எழு கழுகு அழைப்பன-
பல திருக்கரமே.
(501)
|