பக்கம் எண் :

கடை திறப்பு17


பெண்கள் வேளம் புகுந்த தன்மை கூறி விளித்தது

40. மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக ஓடிக்
  கானம்புக வேளம்புகு மடவீர் கடை திறமின்.

    (பொ-நி.) மீனவர்  ஓடிக்கானம்புக,  வேளம்புகு  மடவீர்   திறமின்;
(எ-று)

    (வி-ம்.) மீனம்புகு  கொடி - மீன்  வடிவெழுதிய கொடி.   மீனவர்-
பாண்டியர். விழி-கண்.  அம்பு-நீர்.  கானம்- காடு.  வேளம் - சிறைப்பட்ட
மகளிர் வாழும் அரண்மனை. மடவார்- பெண்கள்.  பாண்டியர் தோற்றோட
அவர்   நாட்டுப்   பெண்கள்    வேளம்  புகுந்தனர். தோற்ற  அரசரின்
மகளிரைச்  சிறை  பிடித்துத்   தனியிடத்தில்  அடைப்பது  பண்டைக்கால
மன்னரின் வழக்கு.                                          (20)

பெண்களைத் திறையாகப் பெற்றமை கூறி விளித்தது

41. அலைநாடிய புனல்நாடுடை அபயற்கிடு திறையா
  மலைநாடியர் துளுநாடியர் மனையிற்கடை திறமின்.

    (பொ-நி) அபயற்கு  இடு  திறையாம்  மலைநாடியர்,   துளுநாடியர்,
திறமின்; (எ-று.)

    (வி-ம்.) அலைநாடிய  புனல்-அலைவீசும் புனல்; காவிரி.  அபயன்-
குலோத்துங்கன். திறையா-திறைப் பொருளாகக் கொடுக்கப் பெற்ற.  மலை
நாடு-சேர நாடு. துளுநாடு-துளுவ நாடு. பெண்கள் திறைப் பொருளானமை
கூறப்பட்டது. அழகு மிக்க பெண்களும் முன்னாளில்  திறைப்பொருளாகச்
செலுத்தப்பட்டனர்.                                          (21)

கணவரோ டுடனுறையுநிலை கூறி விளித்தது

42. விலையி லாதவடம் முலையி லாடவிழி
     குழையி லாடவிழை கணவர்தோள்
மலையி லாடிவரு மயில்கள் போலவரு
   மடந லீர்கடைகள் திறமினோ.

    (பொ-நி)  வடம்  முலையில்  ஆட, விழி குழையில் ஆட, கணவர்
தோள் மலையில்  ஆடிவரும்  மயில்கள்  போல  வரும் நலீர்  திறமின்;
(எ-று.)

    (வி-ம்.) வடம் -  முத்துமாலை. விழி - கண். குழை - காதணி. விழி
குழைவரை  ஓடிய வென்க.  விழை - விரும்பும்.  தோள்மலை-தோளாகிய
மலைமீது; பண்புத்தொகை. நலீர்-நல்லீர்;