பக்கம் எண் :

18கலிங்கத்துப்பரணி

     பெண்களே. கணவர் தோள்மலையில் மயில் போன்றனர் பெண்கள்.
மயில்கள் மலைமீது ஆடுதல் இயல்பாகலின் இவ்வாறு கூறினார்.     (22)

கன்னட நாட்டினரான பெண்களை விளித்தது

43. மழலைத்திரு மொழியிற்சில வடுகும் சில தமிழும்
 குழறித்தரு கருநாடியர் கறுகிக்கடை திறமின்.

     (பொ-நி) மொழியில்,  வடுகும்  தமிழும் கு ழறித்தரு  கருநாடியர்
திறமின்; (எ-று)

     (வி-ம்.) மொழி - சொல், வடுகு - தெலுங்கு.  தரு - கொடுக்கின்ற.
 கருநாடியர் - கருநாடகம்  என்ற  நாட்டில் வாழ்ந்திருந்தவர். கருநடப்
பெண்கள் தெலுங்கும் தமிழும் கலந்து பேசினர் என்க. குறுகி-வந்து.  (23)

ஊடலும் கூடலும் விழைந்த இயல்பு கூறி விளித்தது

44.தழுவுங் கொழுநர் பிழைநலியத்
    தழுவேல் என்னத் தழுவியகை
வழுவ உடனே மயங்கிடுவீர்
   மணிப்பொற் கபாடம் திறமினோ.

     (பொ-நி.) கொழுநர்  பிழை  நலிய, தழுவேல்  என்ன!  தழுவியகை
வழுவ, மயங்கிடுவீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) கொழுநர் - கணவர்.  நலிய-வருத்த.  என்ன-என்ன; என்று
கணவரை  நோக்கிக்கூற.  கை-கணவர் கை.  வழுவ -நழுவ. மயங்கிடுவீர்
-(புணர்ச்சி விருப்பால்). மயங்குவீர் மணிப்பொன்-அழகிய பொன்னாலான.
ஊடலால்  தழுவேல்  எனவும்  கணவர்  தழுவுதல்  ஒழியப்,  புணர்ச்சி
விருப்பால்  மனம்  வருந்தினர்  என்க.                       (24)

நகையின் சிறப்புக் கூறி விளித்தது

45. வேகம் விளைய வருங்கொழுநர்
     மேனி சிவந்த படிநோக்கிப்
போகம் விளைய நகைசெய்வீர்
   புனைபொற் கபாடம் திறமினோ.

     (பொ-நி.) கொழுநர்,   சிவந்தபடி  நோக்கி, போகம் விளைய, நகை
செய்வீர் ,திறமின்; (எ-று.)