(வி-ம்.) வேகம் விளைய-விரைவு மிகுதிப்பட, கொழுநர்-கணவர். மேனி-உடல். சிவந்தது புணர்ச்சி விழைவால் என்க. போகம்-கலவி . விளைய - அதன் பயனாய் உண்டாக. நகை - சிரிப்பு. நகைபோகத்தை விளைத்த தென்க. புனை-அழகுபடுத்தப்பட்ட. (25) துயிலெழுந்த நிலைகூறி விளித்தது | 46. | சொருகு கொந்தளகம் ஒருகை மேலலைய | | | ஒருகை கீழலைசெய் துகிலொடே திருவ னந்தலினும் முகம லர்ந்துவரு தெரிவை மீர்கடைகள் திறமினோ. |
(பொ-நி.)ஒரு கை மேல், அளகம் அலைய, ஒரு கை கீழ், துகிலொடே, அனந்தலினும் முகமலர்ந்துவரு தெரிவைமீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) சொருகு-முடிக்கப்படுகின்ற. கொந்து-பூங்கொத்து. அளகம்- கூந்தல். அலைசெய் - அலைபோல் மடிந்து மடிந்து தோன்றும். துகில்- உடை. அனந்தல் - தூங்கியெழுந்த மயக்க நிலையிலும். தெரிவை-பெண். தூக்கம் தெளிந்ததும் ஒரு கை மேலே கூந்தலைத் தாங்க, ஒரு கை கீழே துகிலைத் தாங்கி எழுந்து வந்தனர் என்க. இத் தாழிசையின் முதலடியிலமைந்துள்ள கருத்து 'அகிலேந்து கூந்தல், ஒரு கையில் ஏந்தி அசைந்தொரு கை துகிலேந்தி ' எனத் தஞ்சைவாணன் கோவையினும் வருதல் காண்க. (26) நகக்குறி கண்டு களித்தமை கூறி விளித்தது | 47. | முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை | | | முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல் கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின.் | (பொ-நி) யாரேனும் இல்லா இடத்தே, கலை நீவி, முலைமீது நகம் மேவு குறியை, கண்ணுற்று, களிப்பீர்கள் திறமின்; (எ-று.) (வி-ம்.) கொழுநர் - கணவர். முன் செல்வம் இல்லாத அவர்- இதற்குமுன் பொருள் இல்லாதவர்; வறிஞர். பொருள்-செல்வம். யார்ஏனும் - ஒருவராவது, கலை - மேலாடை. நீவி - விலக்கி. இவ்வாறு கண்ணுறுதல் கலவி நிலையை நினைந்து மகிழ்தற்கென்க. (27) |