பக்கம் எண் :

மூலமும் உரையும்15

(க - து.) வேதவியாச முனிவர் காட்டிலிருக்கும் தருமராசனிடத்திற்கு வந்தார்.

(வி - ரை.) கொற்றம் - ‘கொல்’ என்னும் பகுதியும் ‘அம்’ மென்னும் விகுதியும் பெற்றுவந்த தொழிற்பெயர். றகரம் எழுத்துப்பேறாக வந்து றகரமாக லகரங்கள் திரிந்தன. ‘வெற்றம்’ என்னும் சொல்லும், ‘வெல்’ என்னும் பகுதியடியாக வந்தது போற்கொள்க. தானைக்கு அடையாகவந்தது, தானையின் வீரப்பண்பை வேலின்மேல் ஏற்றிக் கூறினார். இவ்வாறே,

1‘காலனும் காலம் பார்க்கும் பாராது
வேலீண்டு தானை விழுமியோர்’

எனவும்,

2‘திருந்து வேல் குமணன்’

எனவும் பிற ஆன்றோர் கூறுதலும் காண்க. குருநாடு - குருவென்பவனால் ஆளப்பட்ட நாடு. அதனால் குருகுலத்தார் என்று தருமன் முதலியோரை வழங்குவர். ‘வழிமுறையே வந்த மறையெல்லாம் தந்தான்’ என்பது, சிவபுராணம், விட்டுணு புராணம், பிரமபுராணம் என்று முறைப்படுத்திச் சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் குணமுடையவைகளாகச் செய்தாரென்பதனால் இவ்வாறு கூறினாரென்க. அதனால் இவர்க்கு வியாசரென்னும் பெயருடன் ‘வேதம்’ என்னும் அடைகொடுத்து வேதவியாசரென வழங்கலாயினர். (3)

தருமராசன் வேதவியாசரை வரவேற்றல்

11. மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன்
பிறவிப் பெருந்துயரம் எல்லாம் - அறவே
பிழைத்தேன்யான் என்றானப் பேராழி யானை
அழைத்தேவல் கொண்ட அரசு.

(இ - ள்.) அப் பேர் ஆழியானை - அந்தப் பெருமையுள்ள சக்கரப் படையுடைய கண்ணபிரானை, அழைத்து ஏவல்கொண்ட அரசு - வரவழைத்துத் தூதுபோக்கியும் பிறசெயல்களுக் கெல்லாமும் ஏவிய தருமராசன் (வியாசமுனிவரை நோக்கி), மறை முதல்வ நீ இங்கே வந்து அருள பெற்றேன் - மறைகளுக்கு முதன்மையானவரே நீர் என்னிடத்து எழுந்தருளும் பேறு பெற்றேன்; (ஆதலால்), பிறவி பெரும் துயரம் எல்லாம் அறவே

1, 2. புறம்: 41. 163.